பத்ஹுல் இஸ்லாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்ஹுல் இஸ்லாம் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1952ம் ஆண்டு முதல் வெளிவந்த ஒரு இஸ்லாமிய மாதாந்த இதழாகும். இவ்விதழ் 15 ஆண்டுகள் வெளிவந்துள்ளது. இவ்விதழ் நிறுத்தப்பட்ட பின்பு சந்தாதாரர்களுக்கு மீதித்தொகை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

ஆசிரியர்[தொகு]

  • அப்துல் குத்தூஸ்.

கருத்து[தொகு]

பத்ஹுல் இஸ்லாம் என்ற அரபுப் பதம் இஸ்லாத்தின் வெற்றி எனப் பொருள்படும்.

வெளியீடு[தொகு]

தமிழ்நாட்டின் முதன் முதல் இஸ்லாமிய நூல்களை அச்சிட்டு வெளியிட்ட ஹாஜி சாஹுல் ஹமீது என்ட் சன்ஸ் நிறுவனத்தினர் இவ்விதழை வெளியிட்டனர்.

ஆரம்பம்[தொகு]

இவ்விதழ் 1952ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளிவந்தபோதிலும் அவ்விதழில் காணப்படும் குறிப்பின்படி இவ்வதழ் 1924ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இடையில் இருமுறை நின்று மூன்றாவது தடவையாக மீண்டும் 1952 அக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ஹுல்_இஸ்லாம்&oldid=733884" இலிருந்து மீள்விக்கப்பட்டது