பண்பியல் தொகுப்பு வளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்பியல் தொகுப்பு வளர்ச்சி என்பது சிக்மண்ட் பிராய்டின் மன ஆய்வுக் கொள்கையின் படி மனம் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மன நிலைகள்[தொகு]

  • புற மனம் / வெளி மனம்
  • இடை மனம் / நடுமனம்
  • அக மனம் / ஆழ்மனம்

புற மனம்[தொகு]

இது புற உலகுடன் தொடர்புடையது. நடு மனத்துடன் ' ஒத்து' இயங்குகிறது. மனிதனின் செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதுடன் மனத்திறனையும் எண்ணங்களையும் ஒழுங்குப்படுத்துகிற்து.

இடை மனம்[தொகு]

இது குழந்தைப் பருவத்திலேயே உருவாகிறது. புற மனத்திற்கும், ஆழ்மனத்திற்கும் தொடர்புடையது. பெரும்பாலும் ஆழ் மனதைத் தான் கட்டுப்படுத்துகிறது.

அகமனம்[தொகு]

அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளுக்கும், எண்ணங்களுக்கும் உறைவிடமாக விளங்குகிறது. புற மனத்திற்கு எட்டா நிலையில் இது உள்ளது. இங்கேதான் மனித இயல்புணர்வுகளும், நிறைவேறாத ஆசைகளும், வெளிமனத்திற்கு வராமல் அடக்கி வைக்கப்படுகின்றது. அக மனத்தில் ஆழப்புதைந்து கிடக்கும் ஆவேச உணர்ச்சிகளும் அடக்கி வைக்கப்பட்ட பாலுணர்வும், பகைமை எண்ணங்களும்தான் மன நோய்க்கு ஆரம்ப வித்திடுகின்றன என்பது மன ஆய்வுக் கொள்கையின் கூற்று.

சான்றுகள்[தொகு]

மன நோயும் இன்றைய மருத்துவமும்- டாக்டர். ஓ. சோமசுந்தரம், டாக்டர். தி. ஜெயராமகிருஷ்ணன்