பஞ்சநாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சநாமா (Panchanama) என்பது பாரசீக மொழிச் சொல்லான பஞ்ச என்றால் மரியாதைக்குரிய நபர்கள்; நாமா என்றால் எழுதப்பட்ட ஆவணம் ஆகும். மரியாதைக்குரிய நபர்கள் (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) முன்னிலையில், இந்தியக் காவல் துறை அல்லது சட்ட அமலாக்க முகமைகளால் ஒரு இடத்தை சோதனை செய்யும் போது தேடுதலில் கிடைத்த எழுத்துப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பொருட்களின் பட்டியல் பஞ்சநாமம் எனப்படும். காவல் துறையினர் இந்தப் பட்டியலில் பஞ்சநாமாக்களிடத்தில் (சாட்சிகள்) கையொப்பம் பெற வேண்டும். இப்பட்டியலின் ஒரு பிரதியை யார் இடத்தில் சோதனை நடத்தப்பட்டதோ அவரிடத்திலும் கைப்பற்ற ஆவணங்கள் (பஞ்சநாமம்) குறித்த பட்டியலில் கையொப்பம் பெற வேண்டும். இது பின்னர் நினைவாற்றலைப் புதுப்பிப்பதற்கும், நீதிமன்றத்தில் சாட்சியமாகவும் பயன்படுத்த முடியும். இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பஞ்சநாமா குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இதனை இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 100 & 174 ஆகியவைகளிலிருந்து புரிந்து கொள்ளப்படுகிறது.[1]

இயற்கைக்கு மாறான இறப்பிற்கான காரணத்தை அறிய, காவல் துறையினர் பஞ்சநாமாக்கள் (பஞ்சாயத்தார்) முன்னிலையில் இறந்த உடலைப் பார்த்து, வழக்கின் உண்மைகளை அறிந்த சாட்சிகளிடம் விசாரணை செய்து பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

பஞ்சநாமம் என்பது பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் நிகழும் மற்றும் அவர்கள் பார்க்கும் மற்றும் கேட்கும் சில விஷயங்களை பதிவு செய்யும் ஒரு ஆவணமாகும்.

காவல் துறை அல்லது சட்ட அமலாக்க துறையின் தேடுதலில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சோதனை நடத்தப்பட்டவரின் பெயர், ஆதார் விவரம், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரம், பணம், தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள், வழக்கிற்கு தேவையான பிற பொருட்களின் விவரம் குறிப்பிட வேண்டும்.

எடுத்துக்காட்டு[தொகு]

பாரசீக மொழிச் சொல்லான "நாமா" என்ற சொல் எழுதப்பட்ட ஆவணத்தைக் குறிக்கிறது. பொதுவாக அதனுடன் பின்னொட்டாக இணைக்கப்பட்ட சொல்லால் தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுகள்: நிக்காஹ்-நாமா (எழுதப்பட்ட முஸ்லீம் திருமண ஒப்பந்தம்), ஹிபா-நாமா (எழுதப்பட்ட பரிசுப் பத்திரம்), வசியத்-நாமா (எழுதப்பட்ட உயில்).

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சநாமா&oldid=3748797" இலிருந்து மீள்விக்கப்பட்டது