பச்சமுத்து பைந்தமிழ் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பச்சமுத்து பைந்தமிழ் விருது என்பது தமிழ்நாட்டிலுள்ள திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவிய பணிப்புலமான தமிழ்ப்பேராயம் என்பதன் வழியாக அளிக்கப்படும் தமிழ்ப் பேராய விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது “தமிழ்ப் பேரறிஞர் - வாழ்நாள் சாதனையாளர் விருது” ஆகும். தமிழ் முழுதறிந்த தகைமையும், புலத்துறை முற்றிய பெருமையும் உடைய சான்றோருக்கு அளிக்கப்படுவது. ஆய்வு, நூற்படைப்பு, தமிழ்மொழிக்கு அளப்பரிய தொண்டு, அகவை முதிர்ச்சி ஆகியவற்றை முன்நிறுத்தி வழங்கப்படும் இவ்விருதுக்குப் பிற நாட்டுத் தமிழ் அறிஞர்களும் தகுதி உடையோர் ஆவர். இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 5,00,000 பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன.

விருது பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு விருது பெற்றவர் குறிப்புகள்
2012 முதுமுனைவர் இரா. இளங்குமரனார்
2013 முனைவர் தமிழண்ணல்