பகுப்பு பேச்சு:கண் குறைபாடுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செந்தில், இந்தப் பகுப்பின் பெயரை கண் நோய்கள் என்று மாற்றுவது சரியாக இருக்குமா. அல்லது குறைப்பாடு என்பவை கண் நோய்களில் இருந்து வேற்பட்டவையா. --Natkeeran 20:17, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

  • குறைபாடுகள் (disorders) எனும் போதும் நோய்கள் (diseases) எனும்போதும் சிறிதளவு வேறுபாடு இருக்கின்றது. பொதுவாக கண் சம்பந்தமான வியாதிகளை "குறைபாடுகள்" என அழைப்பர், உதாரணமாக, தூரப்பார்வை - ஒரு குறைபாடு; இங்கே விழிக்கோளம் நீட்சி அடைதல் அந்தக் குறைபாடாகும், அல்லது கண் வில்லை மாற்றம் அடைதல் கூட ஒரு குறைபாடு ஆகும்.

கண்ணிலே கிருமிகளின் தாக்கம் ஏற்படும்போது (எ.கா: Trachoma ) அதனை நோய் என்று அழைக்கலாம். எனவே கண் வியாதிகள் என்பதற்குக் கீழே கண் குறைபாடுகள், கண் நோய்கள் என வகுக்கலாம் என்பது எனது கருத்து, எனினும் மற்றவர்களினதும் ஆலோசனையைக் கேட்பது நன்றே. --சி. செந்தி 20:34, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி. வேறுபாடு முக்கியமானதே. கண் நோய்கள் என்பதற்குள் கண் குறைபாடுகள் என்ற பகுப்பு இருப்பதும் பொருத்தாமாக இருக்கும். பிற பயனர்களின் கருத்தையும் அறியலாம். --Natkeeran 20:36, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

வியாதி (தமிழ் அல்ல) என்பதும் நோய் (தமிழ்) என்பதும் ஒன்றே எனவே வியாதியின் கீழ் நோய் பகுப்பை கொண்டு வர வேண்டாம். --குறும்பன் 02:27, 10 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]