நுண்ணறிவுச் சோதனைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுண்ணறிவு என்பது தொடர்ந்து வளர்ச்சியடையும் ஓர் ஆற்றல் என பினே கருதினார். வயதிற்கேற்ப நுண்ணறிவு வளரும் தன்மையுடையதால் ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ற வகையில் சோதனைகளை அமைத்துள்ளார் பினேயின் சோதனைகள் மூலம் கீழ்க்காணும் நுண்ணறிவுத் திறன்கள் அளவிடப்படுகின்றன.பொது உண்மைகள் பற்றிய அறிவு, சொற்களுக்குரிய விளக்கங்கள், படங்கள், சொற்கள் இவற்றிலுள்ள ஒற்றுமை - வேற்றுமைகள் அறிவும் திறன், நினைவுத்திறன், எளிய கணக்கறிவு ஆகியன அளவிடப்படுகின்றன. எளிய, படங்கள் வடிவங்களை வைத்துச் செய்யும் செயல் திறன் பினே சோதனையில் ஒவ்வொரு வயதிலும் எத்தகைய கேள்விகள் இடம் பெற்றுள்ளன என்பதை விளக்கும் சில மாதிரிக் கேள்விகள். மூன்று துளையிட்ட பலகை - வட்டமான, முக்கோள, சருதமான வடிவப்பொருள்களைச் சரியான துளையில் சரியாக வைத்தல். நினைவு கூர்தல் - மூன்று பொருள்களில் ஒன்றைக் காட்டி மறைத்தவுடன் அதன் பெயரைக் கூறச் செய்தல் ஒப்பிடுதல் - மரக்கரிக்கும் நிலக்கரிக்கும் உள்ள வேறுபாடு - 20 பழமொழிக்குப் பொருள் கூறல் - """"பதறிய காரியம் சிதறிப் போகும்"" - """" சித்திரமும் கைப்பழக்கம்"".

வெக்ஸலர் சோதனை[தொகு]

வெக்ஸலர் (1939 பிறகு 1955 மறுஆய்வு செய்து வெளியிட்ட) சோதனையை ஏழு வயது முதல் பதினாறு வயது வரையிலுள்ள மாணவர்களுக்குப் பயன்படுத்தி அவர்களின் நுண்ணறிவை அளவிட முடியும். இவரது நுண்ணறிவுச் சோதனைகளில் இரண்டு வகைச் சோதனைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. ஒன்று சொற்சோதனை (6வகை), மற்றொன்று செயற்சோதனை (5 வகை) என மொத்தம் 11 வகையான சோதனையாகும். சொற்சோதனை சொல்வழிச் சோதனைகளில் கிடைக்கம் மதிப்பெண் மற்றும் செயற்சோதனைகளில் கிடைக்கும் மதிப்பெண் ஆகியவற்றைக் கூட்டிக் கிடைக்கும் மதிப்பெண் ஒருவரின் நுண்ணறிவாக கருதப்படுகிறது. இது ஒரு தனியாள் சோதனையாகும். ஒவ்வொரு மாணவராக இச்சோதனையைச் செய்திடுவர். இச்சோதனை ஒன்றன்பின் ஒன்றாகத் தரப்படுகிறது. இச்சோதனையைச் செய்து முடிக்க 1மணி நேரம் தேவைப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணறிவுச்_சோதனைகள்&oldid=3503625" இலிருந்து மீள்விக்கப்பட்டது