நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 6°11′27″S 106°46′04″E / 6.1909071°S 106.767875°E / -6.1909071; 106.767875
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம்
நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம் is located in ஜகார்த்தா
நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம்
Location within ஜகார்த்தா
நிறுவப்பட்டதுநவம்பர் 7, 2017 (2017-11-07)
அமைவிடம்ஏ.கே.ஆர் டவர் நிலை எம், ஜலான் பஞ்சாங் எண் 5 கெபோன் ஜெருக், ஜகார்த்தா
ஆள்கூற்று6°11′27″S 106°46′04″E / 6.1909071°S 106.767875°E / -6.1909071; 106.767875,
வகைஓவியக் காட்சியகம்
வலைத்தளம்https://www.museummacan.org/

நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம் (Museum of Modern and Contemporary Art in Nusantara)(MACAN) இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் கேபோன் ஜேருக் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு கலை அருங்காட்சியகமாகும். இந்தோனேசியாவில் நவீன மற்றும் சமகால இந்தோனேசிய மற்றும் சர்வதேச கலைகளின் சேகரிப்புகளைக் கொண்டு அமைந்துள்ள முதல் அருங்காட்சியகம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.[1][2] இந்த நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம் 7,107 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது, காட்சிக்கூடத்தின் பரப்பளவு சுமார் 4,000 சதுர மீட்டர் ஆகும்.[3] டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் 100 சிறந்த இடங்கள் 2018 பட்டியலில் இந்த அருங்காட்சியகம் இடம் பெற்றுள்ளது.[4] இந்த நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகமானது நவம்பர் 2017 இல் பார்வையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

கலைப்படைப்புகள்[தொகு]

நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகத்தில் ஜப்பானிய கலைஞரான யாயோய் குசாமாவின் 'முடிவற்ற பிரதிபலித்த அறை' உள்ளிட்ட, உலகெங்கிலும் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள 800 நவீன இந்தோனேசிய மற்றும் இந்தோனேசிய சமகால கலைப்படைப்புகளின் சேகரிப்பிலிருந்து சுமார் 90 படைப்புகள் பார்வையாளர்களுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[5][6]

ஓவியங்கள்[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் கீழ்க்கண்டவை உள்ளிட்ட ஓவியங்கள் உள்ளன:[7]

  • பெரும் விமர்சனம்: கோகோ கோலா, வாங் குவாங்கி
  • பாகுயோ சந்தை, பெர்னாண்டோ சி. அமசோலோ
  • பெட்டா பாலி டெங்கன் மாதா ஆங்கின், மிகுவல் கோவர்ரூபியாஸ்
  • வைப் அவுட் # 1, எஃப்எக்ஸ் ஹர்சனோ
  • சீனா சீனா, ஜு வீ
  • லான்ஸ்காப் ஹிந்தியா, ராடென் சலே
  • கான்டர் போஸ் ஜாவா, ராடென் சலே
  • ஸ்வாலோஸ் நெஸ்ட், யாயோய் குசாமா
  • சிந்தனை மற்றும் முறை, சூ பிங் [8]

செயல்திறன் மற்றும் நிறுவல் கலைகள்[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் தற்கால மற்றும் நவீன கலை ஓவியங்கள் மட்டுமே வரையறுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படவில்லை. அவை தவிர சமகால பாணிகளையும் உள்ளடக்கிய பல்வேறு நிலையிலான உத்திகள், நுட்பங்கள் மற்றும் நிறுவல் கலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[9][10]

நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் நிறுவல் கலைகள் உள்ளிட்ட கலைகள் அடங்கும்.[11][12]

  • கலைகள் திரும்புகின்றன, நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகத்தின் சேகரிப்புகளை ஆராய்தல்
  • ஏழு கதைகள், லீ மிங்வே
  • ஒரு மில்லியன் ஆண்டுகள், காவராவில்
  • கடந்த காலம் கடந்துவிடவில்லை, அரஹ்மியானி
  • லைஃப் ஹார்ட் ரெயின்போ, யாயோய் குசாமா
  • துனியா தலாம் பெரிட்டா

சிறப்புகள்[தொகு]

உலகளவில் உள்ள பார்வையாளர்களுக்கு கலைஞர்கள் தம் கலையை வெளிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாக இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள உள்ளூர் கலைஞர்களுக்கும், இந்தோனேசியாவிற்கு வெளியே உள்ள பிற நாடுகளைச் சேர்ந்த ஆர்வமுள்ள கலைஞர்களுக்கும் இந்த அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள சமகால கலை அரங்கில் தாம் உருவாக்கிய சிறப்பான படைப்புகளைப் பகிர்ந்துள்ள இங்கு அதிகமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்தோனேசியாவின் கல்வியை கலை, பண்பாடு மற்றும் அவற்றின் பரிமாற்றங்கள் மூலமாக தொழில்சார்ந்த நிலையில் வளர்ந்து வருகின்ற கலை வல்லுநர்களுக்கு தொழில்முறையில் மேம்பாடு அளிப்பதை முக்கியமான நோக்கமாக இந்த அருங்காட்சியகம் கொண்டு இயங்கி வருகிறது. வளர்ந்துவருகின்ற கலை சமுதாயத்திற்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. இந்த அருங்காட்சியகத்தின் சிறப்புக் கூறாக அங்கு அவ்வப்போது நடத்தப்படுகின்ற கண்காட்சிகளைக் கூறலாம். சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் மூலமாக நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம் அனைத்து தரப்பினரையும், வயது பாரபட்சமின்றி ஈர்த்து விடுகின்றது.[13]

பார்வை நேரம்[தொகு]

நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம் ஏ.கே.ஆர் டவர் நிலை எம், ஜலான் பஞ்சாங் எண் 5 கெபோன் ஜெருக், ஜகார்த்தா பாரத் 11530, இந்தோனேசியா என்ற முகவரியில் அமைந்துள்ளது. பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்தை செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையுள்ள நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம். இந்த அருங்காட்சியகத்திற்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை நாளாகும். அவ்வப்போது நடைபெறும் கண்காட்சிகளுக்கு சிறப்புக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10 நபர்களைக் கொண்ட குழுக்களுக்கு சிறப்புக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.[14]

குறிப்புகள்[தொகு]

  1. "Indonesia’s First International Modern Art Museum to Open in 2017". The New York Times. https://www.nytimes.com/2016/01/26/arts/international/indonesia-modern-art-museum.html. பார்த்த நாள்: 17 June 2019. 
  2. "This New International Modern Art Museum Is A First For Indonesia". Forbes. https://www.forbes.com/sites/ogiles/2017/11/14/this-new-international-modern-art-museum-is-a-first-for-indonesia/. பார்த்த நாள்: 17 June 2019. 
  3. "Museum Macan plans to expand on first anniversary". The Jakarta Post. https://www.thejakartapost.com/life/2018/11/06/museum-macan-plans-to-expand-on-first-anniversary.html. பார்த்த நாள்: 17 June 2019. 
  4. "Museum Macan named one of world’s greatest places". The Jakarta Post. http://www.thejakartapost.com/travel/2018/08/27/museum-macan-named-one-of-worlds-greatest-places.html. பார்த்த நாள்: 27 August 2018. 
  5. Emont, Jon (27 November 2017). "Thanks to One Man's Collection, Jakarta Now Has a World-Class Museum". பார்க்கப்பட்ட நாள் 5 March 2018 – via NYTimes.com.
  6. Wang, Jennifer. "Indonesia's Richest 2017: Heir To Chemicals Fortune Brings Modern Art To Indonesia". forbes.com. பார்க்கப்பட்ட நாள் 5 March 2018.
  7. HUTOMO, HENDHY. "Collection". Museum MACAN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-18.
  8. "'Beautiful Pessimist' Xu Bing Gets Solo Exhibition at Museum MACAN". Jakarta Globe. https://jakartaglobe.id/culture/beautiful-pessimist-xu-bing-gets-solo-exhibition-at-museum-macan. பார்த்த நாள்: 17 June 2019. 
  9. "10 Fakta Museum MACAN, Museum Baru di Jakarta yang Instagramable Abis!". IDN Times. https://www.idntimes.com/travel/destination/ayu-nyla-namiya/10-fakta-museum-macan-di-jakarta-c1c2. பார்த்த நாள்: 27 August 2018. 
  10. "New Modern and Contemporary Art Museum to Enter Jakarta's Art Scene in 2017". Jakarta Globe. http://jakartaglobe.id/arts/new-modern-contemporary-art-museum-enter-jakartas-art-scene-2017/#show-hide. பார்த்த நாள்: 27 August 2018. 
  11. Judah, Michael. "Museum MACAN Unveils Three Major Solo Presentations Conceptual Artists - Business Lounge" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-18.
  12. Judah, Michael. "Yayoi Kusama: Life Heart Rainbow - Business Lounge" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-12-18. பார்க்கப்பட்ட நாள் 2018-12-18.
  13. Museum Macan : Jakarta’s New Iconic Art Space
  14. musemacan