நீலகண்ட மகாதேவ அய்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலகண்ட மகாதேவ அய்யர் சி.ஐ.இ (Nilakanta Mahadeva Ayyar)(18 மே 1899 முதல் 29 மார்ச் 1971 வரை) என்பவர் இந்தியக் குடிமைப் பணி அலுவலராக பணிபுரிந்தவர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இராவ் பகதூர் மகாதேவ நீலகண்ட அய்யரின் (நிர்வாக பொறியாளர்[1]) பன்னிரண்டாவது குழந்தைகளில் மூத்தவராக 1899 மே 18 அன்று தென்னிந்தியப் பிராமண குடும்பத்தில் நாகர்கோயிலில் பிறந்தார்.[2] மெட்ராஸில் உள்ள மாநிலக் கல்லூரியிலும் பின்னர் கேம்பிரிட்ச்சிலும் கல்வி பயின்றார்.[3] இவரது இளைய சகோதரர்களில் அரசியலமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் பேராசிரியர் நீ. அ. சுப்பிரமணியன் மற்றும் வைஸ் அட்மிரல் நீலகண்ட கிருஷ்ணன் ஆகியோர் அடங்குவர்.

நிர்வாகி[தொகு]

மகாதேவ அய்யர் அக்டோபர் 1922 இல் ஐ.சி.எஸ் நிலையில் சேர்ந்தார். இவர் ஆரம்பத்தில் வங்காளத்தில் உதவி நீதிபதி மற்றும் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1924இல் துணைப்பிரிவு அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.[4] 1925-27 வரை கல்கத்தா மற்றும் மெட்ராஸில் சுங்க உதவி சேகரிப்பாளராக இந்திய அரசின் நிதித் துறையில் பணியாற்றினார். 1928ஆம் ஆண்டில் அய்யர் வங்காளத்தின் நீதவான் மற்றும் சேகரிப்பாளராக நியமிக்கப்பட்டார். 1936 முதல் 1942 வரை இவர் கைத்தொழில் மற்றும் தொழிலாளர் துறையின் துணை செயலாளராகவும், பின்னர் 1939இல் நிலக்கரி சுரங்க சேமிப்பு வாரியத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். 1943ஆம் ஆண்டில் வங்காள அரசின் குடிமைப் பொருள் வழங்கும் துறையில் இயக்குநராகவும் செயலாளராகவும் பின்னர் மாகாண போக்குவரத்து ஆணையராகவும் பணியாற்றினார். 1947ஆம் ஆண்டில், சுதந்திரத்திற்குப் பிறகு கல்கத்தா துறைமுகத்திற்கான ஆணையர்களின் முதல் இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[3][5] நிலக்கரி சுரங்க சேமிப்பு வாரியத்தின் தலைவராக பணியாற்றும் போது, அய்யருக்கு 1941ஆம் ஆண்டில் இந்தியச் சாம்ராஜ்யத்தின்[6] பின்னர் கெளரவ லெப்டினன்ட் கர்னலாகவும், 1952ஆம் ஆண்டில் இவர் இந்திய அரசின் போக்குவரத்து அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.[3]

இறப்பு[தொகு]

அய்யர் 1958இல் ஓய்வு பெற்றார். 1971இல் பெங்களூரில் இறந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Doyle, Patrick (1905). Indian engineering, Volume 37. Calcutta. பக். xii. 
  2. Sturgess, Herbert Arthur Charlie (1949). Register of admissions to the Honourable Society of the Middle Temple, from the fifteenth century to the year 1944, Volume 3. பக். 858. 
  3. 3.0 3.1 3.2 Transportation (1953). Railway gazette international. Reed Business Pub. பக். 299. 
  4. page 290, The India office list and Burma office list, 1947, Volume 56, India Office, Great Britain.
  5. Mukherjee, Nilmani (1968). The Port of Calcutta: a short history. Commissioners for the Port of Calcutta; [distributors: Oxford Book & Stationery Co.]. பக். 168, 177. 
  6. http://www.london-gazette.co.uk/issues/35029/supplements/7/page.pdf

  1. லண்டனில் உள்ள இந்திய அலுவலகம் வழங்கிய இந்திய சிவில் சர்வீசஸில் உள்ள அரசு ஊழியர்களின் இந்தியா அலுவலக பட்டியல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகண்ட_மகாதேவ_அய்யர்&oldid=3188611" இலிருந்து மீள்விக்கப்பட்டது