நினைவு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நினைவு நிறுவனம் என்பது பொது அறிவு வளங்களின் களஞ்சியங்களைப் பாதுகாத்து பகிரும் நிறுவனம் ஆகும். நூலகம், ஆவணகம், அருங்காட்சியகம், காட்சிக்கூடம், பண்பாட்டு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்கு பொதுவான ஒரு சொல்லாக இது பயன்படுத்தப்படுகின்றது. எண்ணிம உலகில், இந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் பல நிலைகளில் இணைந்ததாலும், வேறுபாடுகள் குறைந்ததாலும், இவற்றை ஒருங்கே குறிக்க இந்தச் சொல கூடிதலாகப் பயன்படுத்தப்படலாயிற்று.[1]

படைப்புகள், பதிவுகள், பெளதீக பொருட்கள், மரபுத் தளங்கள் (sites) ஊடாக நினைவு நிறுவனம் ஒரு சமூகத்தின் அறிவுத் தளங்களை, வரலாற்றை, அடையாளத்தை, தொடர்புகளை பேண உதவுகின்றது. குடிசார் சமூகத்தின் செயற்பாடுகளுக்கு, குறிப்பாக மக்களாட்சிக்கு, மனித உரிமைகளுக்கு நினைவு நிறுவனங்கள் உதவக் கூடியன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Expert Panel on Memory Institutions and the Digital Revolution. "Leading in the digital World: opportunities for Canada's Memory institutions" (PDF). Council of Canadian Academies. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. The Expert Panel on Memory Institutions and the Digital Revolution. "Leading in the digital World: opportunities for Canada's Memory institutions" (PDF). Council of Canadian Academies. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைவு_நிறுவனம்&oldid=2748226" இலிருந்து மீள்விக்கப்பட்டது