நினா சௌபாலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நினா சௌபாலு (Nina Chaubal 1992 இல் பிறந்தவர்) என்பவர் டிரான்ஸ்லைன் எனும் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் இயக்குநர் ஆவார்.[1][2] ஒரு முன்னணி நங்கை, நம்பி, ஈரர், திருனர் செயற்பாட்டாளர் மற்றும் திருநங்கை பெண்ணான, [3] சௌபாலு குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டபோது,அந்த செய்தியானது தேசிய அளவில் கவனம் பெற்றது தி நியூயார்க் டைம்ஸ் [4] மற்றும் சிகாகோயிஸ்ட் போன்ற வெளியீடுகளில் தேசிய அளவில் தலைப்புச் செய்திகளானது. [3] 2019 ஆம் ஆண்டில், சௌபாலுவின் கதையானது அமெரிக்கா இன் டிரான்சிசன் என்பதன் முதல் அத்தியாயத்தின் மையப் பொருளாக இருந்தது, இது திருநங்கைகளின் நிறத்தைப் பற்றிய ஆவணப்படமாகும். [5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சௌபாலு இந்தியாவின் மும்பையில் வளர்ந்தார். [1] 13 வயதில், தான் ஒரு 'திருநங்கை' என்பதனை அறிந்து கொண்டார். இணையம் வழியாக மற்ற திருநங்கைகளுடன் அவர் தொடர்பை ஏற்படுத்துக் கொண்டார். [1]

கல்வி மற்றும் தொழில்[தொகு]

2009 ஆம் ஆண்டில் இலினொய் பல்கலைக்கழகத்தில் (அர்பானா சாம்பேன்) கல்வி பயில அமெரிக்கா சென்றார். [6] அவர் 2011 ஆம் ஆண்டில் ஆற்றுப்படுகை நுட்பத்தில் ஆய்வுதவித் தொகை பெறுவதற்கு 2012 ஆம் ஆண்டில் தகுதி பெற்றார்.2012 ஆம் ஆண்டில், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மீக்கணித்தல் பயன்பாடுகளுக்கான தேசிய மையத்தில் ஒரு நிரலாளராகப் பணியாற்றினார். [7] 2013 இல், திருநங்கையாக தன்னை அறிவித்தார். அவரது குடும்பம் அவரை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் அவர் குடும்பத்தினை விட்டுப் பிரிந்தார். [1] சௌபாலு அமெரிக்காவில் வேலை செய்வதற்கான எச்1பி நுழைவிசைவு பெற்று கூகிளில்மென்பொருள் பொறியாளராக, ஜனவரி 2013 இல் பணியில் சேர்ந்தார். [8] 2014 ஆம் ஆண்டில், சவுபாலு திருநங்கை உதவிமையத்தினை கிரெட்டா மார்டெலாவுடன் இணைந்து அமெரிக்கா, [9] [10] [9] [11] கனடாவில் நிறுவினர்.[12] [13] இருவருமே தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர்கள்.மார்டெலா தற்கொலைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். [9] இந்த காரணத்திற்காகவே இருவரும் இந்த உதவி மையத்தினை துவங்கினர்.

இவர் ஏப்ரல் 2015 வரை கூகிள் பொறியாளராக தனது பதவியில் இருந்தார். [14] அதே மாதம், டிரான்ஸ் லைஃப்லைனில் செயல்பாட்டு இயக்குனராகப் பொறுப்பேற்றார். பிப்ரவரி 2015 இல், ந.ந.ஈ.தி சமத்துவத்திற்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்டார். [15]

நவ. 20, 2015 அன்று, சௌபாலு மற்றும் டிரான்ஸ் லைஃப்லைன் கனேடிய கிளையை தங்கள் செயல்பாடுகளில் தொடங்கினார்கள். [16]

பிப்ரவரி 22, 2016 அன்று, திருநங்கைகள் சந்திக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆதரவின் தேவை குறித்து விவாதிக்க சவுபாலு KGNU 88.5 FM இல் கலந்து கொண்டார். [17] ஏப்ரல் 2016 இல், சௌபாலு, அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் சூசிடாலஜி மாநாட்டில் "திருநங்கைகள் மத்தியில் தற்கொலை: புரிதல் மற்றும் சிகிச்சையில் புதிய வாய்ப்புகள்" என்ற குழுவில் கலந்து கொண்டார். [18]

2018 ஆம் ஆண்டில், சவுபாலு ஒரு மென்பொருள் பொறியாளராக ஹசிலில் பதவியைப் பெற்றார், பின்னர் திருநங்கை உதவி எண்களின் செயல்பாடுகளுக்கு தலைமை வகிக்கும் Even.com இல் மாற்றப்பட்டார்.

2019 ஆம் ஆண்டில், சௌபாலு "நேர் இஸ் மை ரெஃபூஜ் (எங்கே என் அடைக்கலம்?)" என்ற அமெரிக்கன் இன் டிரான்சிசன் எனும் முதல் அத்தியாயத்தில் கலந்து கொண்டார்.இது திருநங்கைகளின் நிறத்தைப் பற்றிய ஆவணப்படமாகும். [5]

விருதுகள் மற்றும் கவுரவங்கள்[தொகு]

  • 2017 ஆம் ஆண்டில், சௌபாலு திருநங்கைகளுக்கான் நீதி, நிதி உதவி வழங்கும் சமூகத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். [19]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சௌபாலு 2015 இல் கிரெட்டா மார்டெலா என்பவரை மணந்தார். [6]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Nina Chaubal helps build community, save lives with Trans Lifeline". NBC News. Archived from the original on 2019-06-29. பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
  2. "Trans Lifeline needs help to continue saving lives". GLAAD. February 24, 2015.
  3. 3.0 3.1 "ICE Is Detaining A Leading Local Trans Activist & Supporters Are Urging Help". The Chicagoist. Archived from the original on 2019-04-07. பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
  4. Santos, Fernanda (January 10, 2017). "Transgender Women Fear Abuse in Immigration Detention". https://www.nytimes.com/2017/01/10/us/transgender-women-fear-abuse-in-immigration-detention.html. 
  5. 5.0 5.1 "TV Review - America in Transition - DelmarvaLife". Archived from the original on 2019-03-27. பார்க்கப்பட்ட நாள் 2020-01-26."TV Review - America in Transition - DelmarvaLife". Archived from the original on 2019-03-27. Retrieved 2020-01-26.
  6. 6.0 6.1 "'Being denied what is integral to you': The struggle for transgender rights". Hindustan Times. July 2, 2016. Archived from the original on July 1, 2019. பார்க்கப்பட்ட நாள் January 26, 2020."'Being denied what is integral to you': The struggle for transgender rights". Hindustan Times. July 2, 2016. Archived from the original on July 1, 2019. Retrieved January 26, 2020.
  7. "Alumn – Innovative Software and Data Analysis".
  8. "Trans Lifeline co-founder released from ICE detention". The Bay Area Reporter / B.A.R. Inc.
  9. 9.0 9.1 9.2 "Nina Chaubal helps build community, save lives with Trans Lifeline". NBC News. Archived from the original on 2019-06-29. பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
  10. Mechanic, Jesse; TheOvergrown.com, ContributorWriter Founding Editor of (December 22, 2017). "America's First Transgender Suicide Hotline Is Now Live". HuffPost. Archived from the original on October 7, 2019. பார்க்கப்பட்ட நாள் January 26, 2020. {{cite web}}: |first2= has generic name (help)
  11. "The Only Crisis Hotline by Trans People, For Trans People". PAPER. July 22, 2019. Archived from the original on July 23, 2019. பார்க்கப்பட்ட நாள் January 26, 2020.
  12. "Archived copy". Archived from the original on 2019-12-18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  13. "Transgender support line launches for Canadians as creators look to expand | canada.com". January 13, 2015. Archived from the original on June 7, 2016. பார்க்கப்பட்ட நாள் January 26, 2020.
  14. "Trans Suicide Hotline Founder Heeds the Call". SF Weekly. December 3, 2015.
  15. "LGBTQ Denver conference draws thousands, rallies activists". February 6, 2015.
  16. "Transgender support line launches for Canadians as creators look to expand | canada.com". January 13, 2015. Archived from the original on June 7, 2016. பார்க்கப்பட்ட நாள் January 26, 2020.
  17. "Outsources: Trans Suicide". February 23, 2016.
  18. "#AAS16 – Summary of Conference Proceedings as Curated from Social Media". April 8, 2016.
  19. "Introducing 2017 TJFP Community Grantmaking Fellow, Nina Chaubal!". April 26, 2017. Archived from the original on April 27, 2017. பார்க்கப்பட்ட நாள் January 26, 2020.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நினா_சௌபாலு&oldid=3818838" இலிருந்து மீள்விக்கப்பட்டது