நிசாம் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிசாம் அரண்மனை (Nizam Palace) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் (முன்னர் கல்கத்தா என அழைக்கப்பட்டது) போஸ் சாலையில் உள்ள ஒரு பாரம்பரிய அடுக்குமாடி கட்டிடமாகும். இது 1933-ல் கட்டப்பட்டது. ஐதராபாத்தின் 7வது நிசாம் மிர் உஸ்மான் அலி கான், ஜே.சி கால்ஸ்டான் (1859-1947) என்று அழைக்கப்படும் ஆர்மீனிய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹன்னசு கராபி என்பவரிடமிருந்து தனது கொல்கத்தா இல்லமாக இதை வாங்கினார். இங்கு வருகைபுரிந்த விருந்தினர்களில் 8வது மன்னர் எட்வர்ட் அடங்குவர். முதலாம் உலகப் போரின் போது இந்த அரண்மனை மருத்துவமனையாகப் பயன்படுத்தப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

கால்ஸ்டான் தனது மனைவியின் அன்பின் நினைவாக இந்த மாளிகையைக் கட்டினார். இதற்கு கால்ஸ்டான் பூங்கா என்று பெயரிட்டார். பின்னர் 1933-ல் ஐதராபாத் நிசாம் மிர் உஸ்மான் அலி கானுக்கு இந்த அரண்மனை விற்கப்பட்டது. நிசாம் ஆரம்பத்தில் இதற்குச் சபா அரண்மனை என்று பெயரிட்டார். இதன் பெயர் பின்னர் நிசாம் அரண்மனை என இதன் பெயர் மாற்றப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாம்_அரண்மனை&oldid=3415860" இலிருந்து மீள்விக்கப்பட்டது