நாற்கரிச்சர்க்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாற்கரிச்சர்க்கரை (tetrose) என்பது நான்கு கரியணுக்களைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரை ஆகும். நாற்கரிச்சர்க்கரைகளை அவற்றின் செயல் தொகுதியை அடிப்படையாய்க் கொண்டு ஆல்டோ நாற்கரிச்சர்க்கரை மற்றும் கீட்டோ நாற்கரிச்சர்க்கரை என இரண்டு வகைகளாய்ப் பிரிக்கலாம். எரித்ரோஸ் ஒரு நாற்கரி ஆல்டோ சர்க்கரை ஆகும். எரித்ருலோஸ் ஒரு நாற்கரி கீட்டோ சர்க்கரை ஆகும்.

ஆல்டோ நாற்கரிச்சர்க்கரைகள் இரண்டு சமச்சீரற்ற கரியணுக்களைக் கொண்டுள்ளன. எனவே நான்கு முப்பரிமாண மாற்றியங்களுக்கு வாய்ப்புண்டு. ஆனால் இயற்கையில் எரித்ரோஸ் மற்றும் திரியோஸ் என இரண்டு வடிவங்களே உள்ளன.

கீட்டோ நாற்கரிச்சர்க்கரைகள் ஒரே ஒரு சமச்சீரற்ற கரியணுவை மட்டுமே உடையவை. எனவே இரண்டு முப்பரிமாண மாற்றியங்களுக்கு வாய்ப்புண்டு. ஆனால் இயற்கையில் எரித்ருலோஸ் என ஒரு வடிவம் மட்டுமே காணப்படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாற்கரிச்சர்க்கரை&oldid=2744620" இலிருந்து மீள்விக்கப்பட்டது