நமாமி பிரம்மபுத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நமாமி பிரம்மபுத்ரா திருவிழா
Namami Brahmaputra Festival
நாள்31.3.2017 முதல் 04.04.2017 வரை
இடம்பிரம்மபுத்திரா நதிக்கரையிலுள்ள 21 மாவட்டங்களில் நடைபெறுகிறது. குவகாத்தியில் உள்ள கச்சாமாரி மலைத்தொடர் விழாவுக்கான முக்கிய இடமாகும்.
பிற பெயர்கள்நமாமி பிரம்மபுத்ரா
நமாமி பிரம்மபுத்ரா ஆற்றுத் திருவிழா
ஏற்பாடு செய்தோர்அசாம் அரசாங்கம்
பங்கேற்றோர்சுற்றுலா பயணிகள் மற்ரும் உள்ளூர் மக்கள்
இணையதளம்namamibrahmaputra.com

நமாமி பிரம்மபுத்ரா (Namami Brahmaputra) என்பது பிரம்மபுத்ரா நதியின் அழகைக் கொண்டாடும் ஒரு பன்னாட்டு விழாவாகும். அசாம் அரசாங்கம் இவ்விழாவை நடத்துகிறது.[1] அசாம் மாநிலத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு நதி விழா நமாமி பிரம்மபுத்ரா விழாவாகும்.[2] 2017 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை இவ்விழா நடைபெற்றது. குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ச்சி நமாமி பிரம்மபுத்ரா விழாவை தொடங்கி வைத்தார்.[3]

ஐந்து நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் அசாம் மாநிலத்தின் கலை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சி அசாம் மாநிலம் முழுவதும் பிரம்மபுத்திரா நதிக்கரையில் இருந்த 21 மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நமாமி_பிரம்மபுத்ரா&oldid=3113953" இலிருந்து மீள்விக்கப்பட்டது