நடிகை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடிகை
இயக்கம்டி. ஜானகிராம்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புகொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர்
மிஸ் குமாரி
அரன்முல பொன்னம்மா
வைக்கம் ராஜு
படத்தொகுப்புபி. ஜி. மோகன்
வெளியீடு1951 (1951)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகை 1951 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] சேச்சி என்ற மலையாளப் படத்தின் தமிழ்ப் பதிப்பான இத் திரைப்படத்தை டி. ஜானகிராம் இயக்கியிருந்தார். கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர், மிஸ் குமாரி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இத் திரைப்படத்துக்கு ஜி. கே. வெங்கடேஷ் இசையமைத்திருந்தார். அவர் இசையமைத்த முதல் திரைப்படம் இதுவே.[2]

இத்திரைப்படத்தில் நடித்த வைக்கம் ராஜு, அந்நாளைய பிரபல பாடகி வைக்கம் சரஸ்வதியின் சகோதரராவார். இப்படத்தில் நடித்தபின் உடல் நலம் குன்றி காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2020-06-25. பார்க்கப்பட்ட நாள் 2022-04-21. {{cite book}}: Text "[" ignored (help)
  2. "Chechi 1950". Archived from the original on 2020-07-15. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடிகை_(திரைப்படம்)&oldid=3719248" இலிருந்து மீள்விக்கப்பட்டது