த அப்பீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
த அப்பீல்  
கிரிஷாமின் 2008 புதினம் தி அப்பீல்
எழுதியவர் {{{எழுதியவர்}}}
Genre(s) கிளர்ச்சியூட்டும் புதினம்
Publisher டபிள்டே
Publication date ஜனவரி 29, 2008
Media type Print (Hardcover)
ISBN ISBN 0-385-51504-7

தி அப்பீல் ஜான் கிரிஷாம் (John Grisham) என்ற அமெரிக்க எழுத்தாளர், எழுதி 2007ஆம் ஆண்டில் வெளி வந்த புதினம் ஆகும். விறுவிறுப்பான சட்டத்துறைப் புதினங்களுக்குப் பெயர் பெற்ற ஜான் கிரிஷாம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த சட்டத்துறை புதினத்தை படைத்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடைபெறும் ஒரு பூச்சிக் கொல்லி தயாரிக்கும் வேதிப் பொருள் நிறுவனத்திற்கும், அப்பொருளால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்குமிடையேயான வழக்கின் மேல் முறையீட்டின் பொழுது நீதிபதி தேர்தலில் தண்ணீராக ஓடும் பணத்தின் மூலம் தீர்ப்பு எப்படி மிகக் குறைந்த விலைக்கு சந்தைக்கு வருகிறது என்பதே கதையின் கரு.

கதைப்பாத்திரங்கள்[தொகு]

  • ஜேனட் பேக்கர் - புற்று நோய்க்கு தனது கணவனையும் மனைவியையும் இழந்து வழக்கு தொடுப்பவர்
  • கார்ல் ட்ருடூ - க்ரேன் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் அதிபதி, தலைவர்
  • வெஸ் பெய்டன் - ஜேனட் பேக்கருக்கான வழக்கறிஞர்
  • மேரி க்ரேஸ் பெய்டன் - ஜேனட் பேக்கருக்கான வழக்கறிஞர்
  • ஷீலா மகார்தி - மிசிசிப்பி உச்ச நீதிமன்ற நீதிபதி
  • ரான் ஃபிஸ்க் - ஷீலா மகார்த்தியின் இடத்திற்காக அவரை எதிர்த்துப் போட்டியிடம் வேட்பாளர்
  • ப்ரையன் ரைனஹார்ட் - நீதிபதி தேர்தலில், கார்ல் ட்ருடூ சார்பாக செயல்பட்டு ரான் ஃபிஸ்கை வேட்பாளராக்கி அவர் வெற்றிபெற முயல்பவர்

கதைச்சுருக்கம்[தொகு]

எச்சரிக்கை : கதையின் கரு, முடிவு பற்றிய மேலோட்டம் தரப்பட்டுள்ளது

"க்ரேன் கெமிக்கல்ஸ்" நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக பல தொன் எடையுள்ள வேதிக்கழிவுகள் அடங்கியுள்ள பீப்பாய்களை போமோர் எனும் ஊரின் ஒதுக்குபுறமான இடத்தில் புதைக்கிறது. வேதிப்பொருள் கசிந்து நிலத்தடி நீரில் கலப்பதால் அதனை பயன்படுத்தும் அவ்வூர் மக்கள் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். பிரச்சனை பெரிதாவது தெரிந்ததும் க்ரேன் அதனது உற்பத்தி பிரிவை மூடிவிட்டு ஊரைவிட்டு வெளியேறுகிறது. புற்று நோயால் பதிக்கப்பட்ட மக்கள் பலர் க்ரேன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முயல்கிறார்கள். க்ரேன் எனும் பெரிய நிறுவனத்தை எதிர்த்து போராடி நீதிமன்றம் செல்ல பெரும்பாலான வழக்கறிஞர்கள் மறுக்கிறார்கள். போமோரில் பிறந்து வழக்கறிஞரான மேரி க்ரேசும் அவரது வழக்கறிஞர் கனவரும், ஜேனட் பேக்கர் என்பவரின் வழக்கை நீதிமன்ற ஜூரி விசாரனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்த வழக்கின் செலவிற்காக தங்களது சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்ட நிலையிலும் தளராமல் போராடி வருகிறார்கள். வழக்கின் தீர்ப்பில் சான்றாயம்(Jury) க்ரேன் கெமிக்கல்ஸ் ஜேனட் பேக்கருக்கு 41 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் எனத்தீர்ப்பளிக்கிறது. க்ரேன் கெமிக்கல்சின் பங்கு நான்கில் ஒருபங்கிற்கு வீழ்ச்சியடைகிறது. நிறுவனம் திவாலாகும் நிலையில், அதன் அதிபதி கார்ல், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அப்பீலுக்கு வரும்பொழுது எப்படியும் சாதகமான தீர்ப்பை பெற முயல்கிறார். இடையில் வரும் உச்ச நீதிமன்ற தேர்தலில் தனக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கக்கூடிய ஒரு நீதிபதியை வேட்பாளராக்கி அவர் வெற்றி பெற பணத்தை செலவழித்து முயற்சி செய்கிறார்.

எச்சரிக்கை முடிவு

கதை அலசும் முக்கிய பிரச்சினை[தொகு]

நீதிபதிகள், நியமன முறையில் அல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதன் பின்விளைவுகள் பற்றி அலசுகிறது. அதேபோல பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள் எப்படி தேர்தல்களை மறைமுகமாக திரித்து தங்களது சுய நலன்களை முன்னிறுத்திக்கொள்கின்றன என்பதையும் காண்பிக்கிறார். எல்லாவற்றையும் மேலாக, வலதுசாரி அரசியல்வாதிகளுக்கு மதம் எப்படி ஒரு நிகரற்ற தேர்தல் வெற்றி கருவியாக இருக்கின்றது என்பதையும் படம்பிடிக்கிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=த_அப்பீல்&oldid=1722787" இருந்து மீள்விக்கப்பட்டது