தோடா வேலைப்பாட்டு துணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோடா வேலைப்பாட்டு துணி இது தமிழ்நாட்டின் நீலகிரி மலைபகுதியில் வாழும் தொல் பழங்குடி இனத்தவர்களான தோடர்கள் அணியும் துணி . இவர்கள் குடில் மட்டுமல்ல ,உடம்பைச் சுற்றி அணியும் “பூத்குள்ளி” என்னும் துணியும் தனித்துவம் மிக்கது .

சிறப்பு[தொகு]

கையால் நெய்யப்படும் வெள்ளை நிற துணிமீது ,நூல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எம்ப்ராய்டரி எனப்படும் துணி வேலைப்பாடுகள் செய்யப்படுகிறது. சுமார் ஒன்பது அடி நீளம் கொண்ட எம்ப்ராய்டரியின் நுனிப்பகுதி சிவப்பு மற்றும் கருப்பு நிற முடிச்சுகள் கொண்டது. இந்த துணி வேலைப்பாடு பெரும்பாலும் துணியின் பின் பக்கமாக செய்வதால் துணியின் முன்புறம் அது புடைப்பாக வந்து துணிக்கு மெருகூட்டுகிறது. இந்தத் துணி வேலைபாட்டு கலை பாரம்பரியமாக தலைமுறைகளுக்கு கைமாறி வருவதால் இதெற்கென தனி வழிகாட்டு புத்தகங்கள் என எதுவும் இல்லை

புக்கூர்[தொகு]

பல நூற்றாண்டுகள் பழமையான இந்த துணி வேலைப்பாட்டுக் கலை தோடர்களின் மொழியில் 'புக்கூர் 'என்று சொல்லப்படுகிறது. தற்போது உடம்பை சுற்றி போர்த்தப்படும் துணிகள் மட்டும்மல்லாது, சுவர் அலங்காரங்கள், மேசை விரிப்புகள், தோள் பைகள் போன்றவற்றிலும் இந்த தோடா வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.

பார்வை நூல்: மனோரமா இயர் புக் 2015

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடா_வேலைப்பாட்டு_துணி&oldid=3753153" இலிருந்து மீள்விக்கப்பட்டது