தொல்லியல் அருங்காட்சியகம், பூண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்திரம்பாக்கத்தில் கிடைத்த அடர்பழுப்பு கீழைப் பழங்கற்கால ஆயுதங்கள் தற்போது பூண்டி அருங்காட்சியகத்தில் உள்ளன.

பூண்டி தொல்லியல் அருங்காட்சியகம் சென்னைக்கு அருகிலுள்ள பூண்டி பகுதியில் அமைந்த தொல்லியல் அருங்காட்சியகம் ஆகும். 1985ல் தமிழகத்தில் கிடைத்த வரலாற்றுக்கு முற்பட்ட கற்கால ஆயுதங்களை காட்சிப்படுத்தும் நோக்கில் இது திறக்கப்பட்டது.

காட்சிப் பொருட்கள்[தொகு]

இங்கு பழங்கற்கால கருவிகள், புதிய கற்கால கொடாரிகள், பெருங்கற்கால பானைகள், சுடுமண் ஈமப்பேழைகள், முக்காலித் தாழி, இரும்பு கோடாரிகள், இரும்பு குழாய்களை செய்வதற்கான வார்ப்புருக்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மூலம்[தொகு]