தொல்காப்பியமும், பாணினீயமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழிலக்கணத்தை வடமொழி வழித்தாகக் காட்டல் வேண்டி, நடுநிலை திறம்பிய வரலாற்றாசிரியரும், பிராமணத் தமிழ்ப் புலவரும் தொல்காப்பியத்தைப் பாணினீயத் திற்குப் பிற்பட்டதாகக் காட்டுவதுண்டு.

காலம்:பாணினியின் காலம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டென்று வரலாற்று நூலாசிரியராலும், மொழியாராய்ச்சியாளராலும் வரையறுக்கப் பெற்றுள்ளது.தொல்காப்பியம், பாணினீயத்திற்கு முந்தியதும் பாரதக் காலத்திற்கும் (கி.மு.1000) கடைக்கழகத் தொடக்கத்திற்கும், (கி.மு. 5 ஆம் நூற்.) இடைப்பட்டதுமாதலின், கி.மு. 7ஆம் நூற்றாண்டின தாகும்.

முக்கியக் காரணிகள்[தொகு]

  1. தொல்காப்பியம் பாரதக்கால நான்மறை வகுப்பிற்குப் பிற்பட்டமை ஆகும்.
  2. தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில், பாணினீயத்திற்கு முந்திய ஐந்திரமே குறிக்கப்பெற்றுள்ளமை கவனிக்கத் தக்கதாகும்.
  3. தொல்காப்பியம் கடைக்கழகத்திற்கு, முந்திய நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையத்து அரங்கேறியமையும், கடைக்கழகத் தோற்றம் கி.மு. 5ஆம் நூற்றாண்டென்று இராமச்சந்திர தீட்சிதரால் நிறுவப்பெற்றுள்ளது.
  4. தொல்காப்பியர் தம் காலத் தமிழகத்தில் வேற்றரசர் படையெடுப்பும், சிற்றரசர் தலையெடுப்பு மின்மையை, "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" (1336) என்னுந் தொடராற் குறித்திருத்தல் கவனிக்கத் தக்கது.
  5. அற்றைத் தமிழக எல்லை வடவேங்கடமும், தென்குமரியும் குணகடலும் குடமலையும் என அறியுமாறு, "நாற்பெய ரெல்லை" (1336) எனத் தொல்காப்பியத்திற் குறிக்கப் பெற்றிருத்தல்.
  6. இரண்டொரு தொல்காப்பிய இலக்கண வரம்பு கடைக் கழகச் செய்யுளிற் கைக்கொள்ளப் பெறாமை.
  7. தொல்காப்பியம் எழுத்தும், சொல்லும், பொருளும், ஆகிய மூவதிகாரங் கொண்டிருத்தலும், பாணினீயம் எழுத்தும் சொல்லுமாகிய ஈரதிகாரத்ததே யாதலும், ஆகவே முன்னதினின்று பின்னதன்றிப் பின்னதினின்று முன்னது தோன்றற்கிடமின்மையும் குறிப்பிடத் தக்கன ஆகும்.
  8. தொல்காப்பியப் பொருளதிகாரம், யாப்பணிகளையும் தன்னுட் கொண்டதாகும்.