தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு
National Egg Coordination Committee
Founder(s)மருத்துவர் பாண்டா வாசுதேவ் ராவ்
Establishedமே 1982
Chairmanமருத்துவர் பாண்டா வாசுதேவ் ராவ்
Slogan"என் முட்டை, என் விலை, என் வாழ்க்கை"
Websitewww.e2necc.com

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (National Egg Coordination Committee)(என்.இ.சி.சி) என்பது இந்தியாவில் உள்ள கோழிப்பண்ணை விவசாயிகளின் சங்கமாகும். இதில் 25,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த இரண்டு தசாப்தங்களில், என்.இ.சி.சி பொதுவாகக் கோழித் தொழிலின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டுள்ளது. குறிப்பாக முட்டை சார்ந்த தொழில், சந்தை தலையீடு, விலை ஆதரவு நடவடிக்கைகள், முட்டை ஊக்குவிப்பு பிரச்சாரங்கள், நுகர்வோர் கல்வி, சந்தை ஆராய்ச்சி போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. கிராமப்புற சந்தை மேம்பாடு மற்றும் தொழில் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு பணியாற்றி வருகின்றது.

குறிக்கோள்கள்[தொகு]

இந்திய முட்டை தொழிலில் முக்கியமாக முட்டை விலையில் கவனம் செலுத்திக் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்க என்.இ.சி.சி பரந்த நோக்கங்களைக் கொண்டுள்ளது. இதனுடைய நோக்கம் நிறைவேறிய பின்னர், பின்வருவனவற்றை அடைய என்.இ.சி.சி தன் நடவடிக்கைகளின் நோக்கத்தினை விரிவுபடுத்தியுள்ளது.[1]

  • வாடிக்கையாளருக்கு நியாயமான விலை, இடைத்தரகருக்கு போதுமான பங்களிப்பு மற்றும் விவசாயிக்கு நியாயமான வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில், இது முட்டை விலையை அறிவிக்கிறது.[2]
  • உபரியான பகுதிகளிலிருந்து பற்றாக்குறை பகுதிகளுக்கு முட்டைகளைச் சந்தைப்படுத்தக் கண்காணிப்பு, நிர்வாகம் மற்றும் ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்துதல்
  • அக்ரோகார்பெக்ஸ் இந்தியா லிமிடெட் மூலம் சந்தை தலையீடு.
  • பல நிலை சந்தைப்படுத்தலையும் சந்தைப்படுத்துபவர்களின் நம்பகமான மற்றும் நெருக்கமான வலையமைப்பை ஏற்படுத்தி முட்டை விற்பனையினை மேம்படுத்துதல்.
  • முட்டை வர்த்தகம், முட்டை பண்ணை, முட்டை ஏற்றுமதியை ஊக்குவித்தல்.
  • நடைமுறையில் உள்ள உற்பத்திக்கான தொழில்நுட்பத்தையும் தகவல்களையும் பயன்படுத்தி முட்டை உற்பத்தியினை அதிகரித்தல்.

வரலாறு[தொகு]

1980களின் முற்பகுதியில் இந்தியக் கோழித் தொழில் அசாதாரண தொடர் நெருக்கடியினைச் சந்தித்தது. ஏனெனில் விற்பனை விலை உற்பத்தி செலவை விடக் குறைவாக இருந்தது. பல கோழி விவசாயிகள் பெரும் இழப்பு காரணமாக தங்கள் பண்ணை நடவடிக்கைகளை நிறுத்தினர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள, டாக்டர் பி.வி.ராவ் மற்றும் சி.எச். ஜகபதி ராவ் நாடு முழுவதும் பயணம் செய்து, குழுக்கள், தனிநபர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் 300க்கும் மேற்பட்ட கூட்டங்களை ஏற்பாடு செய்தார். இந்தியா முழுவதிலுமிருந்து கோழி விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களின் அவர்களின் பிரச்சனைகளை நீக்குவதே இதன் நோக்கமாக இருந்தது. இதன் அடிப்படையில் மே 1982 இல், என்.இ.சி.சி முறையாக இந்தியச் சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒரு அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்டது. மே 14, 1982 அன்று, என்.இ.சி.சி முட்டை விலையை அறிவிக்கத் தொடங்கியது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Objectives : Aiming high and how are they achieved". National Egg coordination Committee. Archived from the original on 23 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 December 2012.
  2. "NECC fixes minimum wholesale price for egg". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3668656.ece. பார்த்த நாள்: 11 December 2012. 
  3. "The Beginning". National Egg coordination Committee. Archived from the original on அக்டோபர் 23, 2018. பார்க்கப்பட்ட நாள் December 11, 2012.