தென்மேற்கு பூச்சியியல் வல்லுநர்கள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்மேற்கு பூச்சியியல் வல்லுநர்கள் சங்கம் (Society of Southwestern Entomologists) தென்மேற்கு பூச்சியியல் சங்கமாக 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தென்மேற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் பூச்சியியல் ஆய்வு சாதனைகளை வளர்ப்பதற்கான நோக்கத்துடன் இச்சங்கம் நிறுவப்பட்டது.[1] அமெரிக்க பூச்சியியல் சங்கத்தின் தென்மேற்கு கிளையுடன் உண்டாகும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக 2003 ஆம் ஆண்டில் சங்கத்தின் பெயர் மாற்றப்பட்டது, ஏனெனில் அவர்கள் ஆண்டுதோறும் சந்திக்கிறார்கள்.[2]

மார்ச், சூன், செப்டம்பர் மற்றும் திசம்பர் மாதங்களில் வெளியிடப்படும் காலாண்டு இதழான தென்மேற்கு பூச்சியியல் வல்லுநர் என்ற செய்தி இதழை வெளியிவதுதான் இந்த சங்கத்தின் முதன்மை செயல்பாடாகும்.இச்செய்தி இதழ் தென்மேற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நிகழும் பூச்சியியல் ஆராய்ச்சியை உள்ளடக்கிய ஒரு பிராந்திய வெளியீடாகும். முடிவுகள் புவியியல் ரீதியாக பொருந்தினால் மற்ற பிராந்தியங்களில் நடத்தப்படும் ஆய்வுகளையும் இதழில் வெளியிட பரிசீலிக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Society of Southwestern Entomologists: Historic Documents, http://sswe.tamu.edu/historic_documents.htm பரணிடப்பட்டது 2017-05-14 at the வந்தவழி இயந்திரம், accessed 14 Sep 2011.
  2. Society of Southwestern Entomologists: July 2009, http://sswe.tamu.edu/index.htm, accessed 14 Sep 2011.
  3. "Society of Southwestern Entomologists". sswe.tamu.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.

புற இணைப்புகள்[தொகு]