தென்கல்லகநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென் கல்லக நாடு என்பது கச்சி எனும் காஞ்சி ஆகும். இது முற்கால பாண்டியர் நாடு.


கச்சி எனும் காஞ்சி நகரின் தோற்றம் பற்றிய குறிப்புகள் இல்லை என்றாலும் இதன் வயதை சுமார் 2500 ஆண்டுகளுக்கு கீழ் சொல்ல இயலாது. இளந்திரையான் என்னும் மன்னன் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகரை ஆட்சி செய்ததாக பரிபாடல் குறிப்புகள் இருப்பதாக அறிகின்றோம்.

இளந்திரையான் ஒரு சோழ இளவரசன் என்று பல கதைகள் இருப்பினும் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. சங்ககால அரசர்களில் ஒருவனாக அறியப்படும் இம்மன்னன் பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன். இவர் தொண்டைமான் இளந்திரையன் கச்சியோன் எனப் பாராட்டப்பட்டுள்ளான்.


மூவேந்தர்களுக்கு இணையாக தென்னிந்தியாவை பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு ஆண்டார்கள். இவர்களின் காலத்தில் கட்டிடக்கலை அதன் உச்சத்தை அடைந்தது. இந்த பல்லவர்கள் மல்லர் குல பாண்டியர் வழிதோன்றல்கள் ; இந்த வரலாறு அழிக்கப்பட்டு உள்ளது .



கச்சிபேடு எனும் பகுதிகள் முற்கால மல்லர் பாண்டியர் கட்டிய கல் கோயில்கள் ; ஆனால் வரலாறு அழிக்கப்பட்டு உள்ளது .

கச்சிப்பேடு

வீழ்த்தப்பட்ட மல்லர் பாண்டியர்தம் கச்சிப்பேடு

கச்சிப்பேடு இளந்தச்சன்

கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்

கச்சிப்பேடு பெருந்தச்சனார் உருவாகிய கல் கோயில்


கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்

கவிஞர் என்பதற்கு அப்பால் கொத்தனார் = கொற்றனார் பொருள் ஒன்றாதல் ஆராயப்பட வேண்டும்.

கச்சி எனும் கல்லை கொத்துவதால் - கொற்றனார்.

ஆக புலவர் என்பதற்கு அப்பால் இவருக்கும் கல் தொழிலுக்கும் தொடர்பு யாது ?.

கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.

காஞ்சியில் பிறந்து அதன் அருகில் உள்ள கச்சிப்பேடு என்னும் ஊர்ப்பகுதியில் வாழ்ந்தவர் இவர். குறுந்தொகை நூலில் 213, 216 எண்ணுள்ள இரண்டு பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.

குறுந்தொகை 213 தரும் செய்தி

கலைமான் பாலை நிலத்தில் தனக்கு உணவு கிடைக்காமையால் காலால் பறித்துத் ததரல் என்னும் கிழங்குகளைத் தன் குட்டிக்கு ஊண்டித் தானும் உண்ணும். தெறித்துத் துள்ளி விளையாடும் தன் குட்டிக்கு நிழல் இல்லாமையால், தான் போய்க் குட்டியின் பக்கத்தில் நின்று அதற்கு நிழல் தரும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்கல்லகநாடு&oldid=3114837" இலிருந்து மீள்விக்கப்பட்டது