துர்ஜயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துர்ஜயன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் கண்வ முனிவரின் சீடனும், அரசனும் ஆவார். இவர் தேவகன்னியான ஊர்வசியின் அழகில் மயங்கி தன்னுடைய நாட்டினையும், மனைவியையும் துறந்தார். ஊர்வசியுடன் வாழும் பொழுது தன்னுடைய மனைவியை எண்ணி அவளை சந்திக்க சென்றார். அப்பொழுது அவன் மனைவி, பத்தினியுடன் அல்லாது பிற பெண்ணுடன் உறவு கொண்டமைக்கான பாவம் நீங்கிட கண்வ முனிவரின் ஆசியுடன் தவம் செய்யும் படி கோரினாள்.

இறுதியில் கடுமையான தவத்தினை மேற்கொண்ட துர்ஜயனை, கண்வ முனிவர் சிவபெருமானை வாரணாசியில் சென்று வணங்குபடி கூறினார். வாரணாசி சென்று சிவபெருமானை வணங்கி முக்தி பெற்றார் துர்ஜயன்.

கருவி நூல்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கூர்ம புராணம் பகுதி இரண்டு - தினமலர் கோயில்கள் தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்ஜயன்&oldid=1458871" இலிருந்து மீள்விக்கப்பட்டது