தில் குமாரி பண்டாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தில் குமாரி பண்டாரி (Dil Kumari Bhandari) என்பவர் சிக்கிமில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மற்றும் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை) ஆவார். இவர் 2012 வரை இந்திய கூர்காக்களின் அமைப்பான பாரதிய கூர்கா பரிசங்கின் தலைவராகவும் இருந்தார். நேபாள மொழி பேசும் மக்களுக்காக இவர் தொடர்ந்து பணியாற்றி வந்தார். இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் நேபாளி மொழியை சேர்ப்பதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.[1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

தில் குமாரி பண்டாரி 14 மே 1949 அன்று இந்தியாவின் டார்ஜிலிங் மாவட்டத்தில் பனா புட்டாபோங் கிராமத்தில் பிறந்தார். இவர் மிகவும் பண்பட்ட மற்றும் பாரம்பரிய ராய் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய நிலை வரை படித்தார்.[2] தில் குமாரி 1985 மே முதல் 1989 நவம்பர் 27 வரைக்கும் ,ஜூன் 20, 1991 முதல் 10 மே 1996 வரைக்கும் இரண்டு முறை சிக்கிமிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

தொழில்[தொகு]

இவர் ஒரு ஆசிரியர், சமூக சேவகர் மற்றும் பத்திரிகையாளராக பணியாற்றினார். [4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

1984 இல் சிக்கிமின் 8 வது மக்களவைத் தேர்தலில், நர் பகதூர் பண்டாரி 86,024 இடங்களில் 56,614 இடங்களைப் பெற்று தேர்தல்களை வென்றார். இந்த சட்டமன்றத் தேர்தலில் தில் குமாரி பண்டாரி தோல்வியடைந்தார். ஆனால் நர் பகதூர் பண்டாரி மாநில முதல்வராக பதவியேற்க மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக நாடாளுமன்றத்தில் தனது இடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. இதன் விளைவாக, ஏப்ரல் 1985 இல் இடைத்தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது. அதில் தில் குமாரி பண்டாரி உட்பட ஒன்பது வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் பதினொன்றாம் மணி நேரத்தில் தில் குமாரி பண்டாரி தவிர அனைவரும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதன் விளைவாக, இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் அவர் நவம்பர் 27, 1989 வரை சட்டமன்றத்தில் பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு சிக்கிமில் நடைப்பெற்ற 9 வது மக்களவைத் தேர்தலில், தில் குமாரி பண்டாரி (இந்திய தேசிய காங்கிரஸ்) 1,33,699 இடங்களில் 28,822 இடங்களில் மட்டுமே வென்றார் வெற்றியாளரான நந்து தாபா (சிக்கிம் சங்கம் பரிஷத்) 91,608 இடங்களில் வென்றார். [5]1991 ஆம் ஆண்டு சிக்கிமில் இருந்து 10 வது மக்களவைத் தேர்தலில், சிக்கிம் சங்கிரம் பரிஷத்துக்குத் திரும்பிய தில் குமாரி பண்டாரி, மொத்தம் 1,18, 502 செல்லுபடியாகும் வாக்குகளில் 1, 03, 970 வாக்குகளைப் பெற்று சட்டசபையில் 20 ஜூன் 1991 வரை பணியாற்றினார். [6].

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 1968 மார்ச் 28 அன்று சிக்கிமின் முதல்வரான நர் பகதூர் பண்டாரியை மணந்தார். இத்தம்பதியருக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் பிறந்தனர்.[7]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் நேபாளி மொழியைச் சேர்ப்பதில் பங்களித்ததற்காக 2016 ஆம் ஆண்டிற்கான சிக்கிம் சேவா ரத்னா , மாநிலத்தின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருது , தில் குமாரி பண்டாரிக்கு வழங்கப்பட்டது.[8] ஹம்ரோ ஸ்வாபிமானிடமிருந்து கவ்ரவ் விருதையும் பெற்றவர்.[9]

குறிப்புகள்[தொகு]

  1. "5 Parliamentarians Who Helped Sikkim Become a Flourishing State" (in en). Nelive. 2016-12-19 இம் மூலத்தில் இருந்து 2017-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729133905/https://www.nelive.in/sikkim/politics/5-parliamentarians-who-helped-sikkim-become-flourishing-state. 
  2. "Bio-Data of Member of X Lok Sabha". www.indiapress.org. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
  3. http://www.parliamentofindia.nic.in/ls/lok10/mp73.htm.
  4. "Bio-Data of Member of X Lok Sabha". www.indiapress.org. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
  5. Lama, Mahendra P. (1994) (in en). Sikkim: Society, Polity, Economy, Environment. Indus Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788173870132. https://books.google.com/books?id=LvuOKCIICMEC&pg=PA107&lpg=PA107&dq=dil+kumari+bhandari&source=bl&ots=lSSBa8rxYt&sig=3GAoZbcv_vtetdDYyToCVMR3ocE&hl=en&sa=X&ved=0ahUKEwi99rzE7a3VAhVGPI8KHSgJAqY4FBDoAQgmMAA#v=onepage&q=dil%20kumari%20bhandari&f=false. 
  6. Lama, Mahendra P. (1994) (in en). Sikkim: Society, Polity, Economy, Environment. Indus Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788173870132. https://books.google.com/books?id=LvuOKCIICMEC&pg=PA107&lpg=PA107&dq=dil+kumari+bhandari&source=bl&ots=lSSBa8rxYt&sig=3GAoZbcv_vtetdDYyToCVMR3ocE&hl=en&sa=X&ved=0ahUKEwi99rzE7a3VAhVGPI8KHSgJAqY4FBDoAQgmMAA#v=onepage&q=dil%20kumari%20bhandari&f=false. 
  7. "Bio-Data of Member of X Lok Sabha". www.indiapress.org. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
  8. "Sikkim Sewa Ratna conferred on 42nd State Day" (in en). India.com. Press Trust of India. 2016-05-17. http://www.india.com/news/india/sikkim-sewa-ratna-conferred-on-42nd-state-day-1191496/. 
  9. "Gaurav Awardee | Hamro Swabhiman". hamroswabhiman.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்_குமாரி_பண்டாரி&oldid=3216695" இலிருந்து மீள்விக்கப்பட்டது