திறந்த தரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திறந்த தரவு (open data) என்பது குறிப்பிட்ட தரவுகள் இலவசமாக திறந்த முறையில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பது பற்றிய கொள்கையும் செயல்முறையும் ஆகும். மரபியல் தரவுகள், நெல் உள்ளி போன்ற உயிரினங்கள் பற்றிய தரவுகள், பொதுப் பல்கலைக்கழகங்களின் ஆய்வுத் தரவுகள் முடிவுகள், வேதிகள் பற்றிய தரவுகள், புவியியல் தரவுகள், அரசின் திட்டங்கள் பற்றிய தரவுகள், வரவு செலவு விபரங்கள், அரசியல்வாதிகளின் செலவுகள் வருமானம் போன்ற தரவுகள் திறந்த முறையில் கிடைப்பது மனித இனத்துக்கு நல்லது என்பது திறந்த தரவுகள் தத்துவத்தின் வாதம் ஆகும்.

இணையத் தொழில்நுட்பம் திறந்த தரவுகளை சேகரித்து, பகுப்பாய்ந்து, பகிர்வதற்கான நுட்பங்களை இலகுவாக்கி இருக்கிறது. இதனால் அரசுகளும் நிறுவனங்களும் தமது தரவுகளை திறந்த முறையில் தரவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திறந்த_தரவு&oldid=2750782" இலிருந்து மீள்விக்கப்பட்டது