திருவாங்கூர் சுண்டங்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாங்கூர் சுண்டங்கோழி (travancore red spurfowl, Galloperdix spadicea stewarti), என்பது இந்தியாவில் காணப்படும் அகணிய உயிரி இனமான, சுண்டங்கோழி பறவையின் மூன்று கிளையினங்களில் ஒன்றாகும்.[1] இதன் குடும்பப்பெயர் பாசின்டேசு (Phasianidae) என்று அறியப்படுகிறது. இவை கேரளத்தில் காணப்படுகின்றன.

விளக்கம்[தொகு]

இப்பறவை சுண்டங்கோழியைவிட ஆழ்ந்த கருஞ் சிவப்பான செம்பழுப்பு நிற உடல் கொண்டது. சீரான சாம்பல் பழுப்பு நெளிகோடுகள் இதன் உடலில் இல்லை. இந்த சிறு வேறுபாடே இப்பறவை தனி உள்ளினமாக பிரிக்க காரணம் ஆகும். இதன் பழக்க வழக்கங்களும் இனப்பெருக்க முறையும் சுண்டங்கோழியைப் போலவே காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Pheasants, partridges, francolins". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
  2. க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 104-105. 

வெளி இணைப்புகள்[தொகு]