திஜிமோன் கவுன்சோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திஜிமோன் கவுன்சோ
பிறப்புதிஜிமோன் காஸ்டன் கவுன்சோ
24 ஏப்ரல் 1964 (1964-04-24) (அகவை 60)
கொட்டொனௌ, பெனின்
பணிநடிகர், வடிவழகர்
செயற்பாட்டுக்
காலம்
1986–இன்று வரை
துணைவர்கிமோரா லீ சிம்மன்ஸ்
(2007–2012)
பிள்ளைகள்1

திஜிமோன் காஸ்டன் கவுன்சோ[1] (ஆங்கில மொழி: Djimon Gaston Hounsou) (பிறப்பு: 24 ஏப்ரல் 1964)[2] என்பவர் பெனின்-அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார். இவர் தனது திரைப்பயணத்தை இசை காணொளி மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து வித்தவுட் யு ஐ ஆம் நொதிங் (1990), அமிஸ்டாட் (1997), கிளாடியேட்டர் (2000), இன் அமெரிக்கா (2002), பிளட் டைமன்ட் (2006), பியூரியஸ் 7 (2015)[3] போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014)[4][5] மற்றும் கேப்டன் மார்வெல் (2019) போன்ற திரைப்படங்களிலும் சமுத்திரப்புத்திரன் (2018) மற்றும் ஷசாம்! (2019) போன்ற டிசி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[6][7]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கவுன்சோ 24 ஏப்ரல் 1964 ஆம் ஆண்டு பெனின் கொட்டொனௌவில் ஆல்பர்டைன் மற்றும் பியர் கவுன்சோ என்ற சமையல்காரருக்கு மகனாக பிறந்தார்.[8] அவர் தனது பன்னிரெண்டாவது வயதில் பிரான்சில் லியோனுக்கு குடிபெயர்ந்தார்.[9] 1987 ஆம் ஆண்டில் கவுன்சோ ஒரு வடிவழகராக பாரிஸில் ஒரு தொழிலை நிறுவினார். அதை தொடர்ந்து 1990 இல் அமெரிக்கா சென்றார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hounsou, Djimon (May 26, 2016). "Tonight at 9/8c on #foxtv #waywardpines". Instagram.
  2. "Djimon Hounsou: Biography". TV Guide. பார்க்கப்பட்ட நாள் November 22, 2012.
  3. "Djimon Hounsou Joins Fast & Furious 7". empireonline.com. 12 September 2013. http://www.empireonline.com/news/story.asp?NID=38730. 
  4. "Alan Taylor Offers New ‘Thor 2′ Details; Djimon Hounsou on ‘Guardians of the Galaxy’". screenrant.com. http://screenrant.com/thor-2-alan-taylor-details-djimon-hounsou-guardians-galaxy/. 
  5. "Marvel Studios Begins Production on Guardians of the Galaxy". Marvel.com. July 20, 2013. பார்க்கப்பட்ட நாள் July 20, 2013.
  6. "Exclusive: DC's 'Shazam!' casts 'Guardians' actor Djimon Hounsou as the Wizard". Entertainment Weekly. Archived from the original on 2019-04-09. பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
  7. "Exclusive: 'Aquaman' reveals first look at the exotic Fisherman King". Entertainment Weekly. பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
  8. "Djimon Hounsou Biography (1964-)". Filmreference.com. பார்க்கப்பட்ட நாள் November 15, 2012.
  9. "Daily Show". Comedy Central இம் மூலத்தில் இருந்து மே 10, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170510171734/http://www.cc.com/episodes/hnv1q4/the-daily-show-with-trevor-noah-extended----may-9--2017---djimon-hounsou-season-22-ep-22104. 
  10. Djimon Hounsou Biography - Yahoo! Movies

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திஜிமோன்_கவுன்சோ&oldid=3859706" இலிருந்து மீள்விக்கப்பட்டது