தாள தசப்பிராணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருநாடக இசையில் தாளத்தின் 10 அம்சங்கள் அல்லது கூறுகள் தாள தசப்பிராணங்கள் எனப்படும். அவையாவன:

  1. காலம்
  2. மார்க்கம்
  3. கிரியை
  4. அங்கம்
  5. கிரகம்
  6. ஜாதி
  7. களை
  8. லயம்
  9. யதி
  10. பிரஸ்தாரம்

காலம்[தொகு]

காலம் இசையில் நேரத்தின் அலகுகளை வகுக்கிறது. கணம் (க்ஷணம்), லவம், காஷ்டம், நிமிடம் (நிமிஷம்), களை, சதுர்பாகம், அனுத்ருதம், துருதம், லகு, புலுதம், காகபதம் - இவை காலத்தின் வரையறைகள்.

மார்க்கம்[தொகு]

தாளத்தின் ஒரு அட்சரத்துக்குள் எத்தனை சுரங்கள் அடங்கும் என்பதை மார்க்கம் வரையறுக்கிறது. சரியான முறையில் தாளம் போடவும், உருப்படிகளை சரியான சுர-குறிப்புகளில் எழுதவும் மார்க்கம் உதவுகிறது.

ஆறு மார்க்கங்கள் உள்ளன. அவை ஷண்மார்க்கங்கள் என்றழைக்கப்படுகின்றன. முதல் மூன்று பல்லவி பாடவும், பின் மூன்று வர்ணங்கள், கிருதிகள் போன்ற இதர இசை வடிவங்களுக்கும் பயன்படுகின்றன.

மார்க்கம் களைகள், ஒரு தாள அட்சரத்துக்கு
1. தட்சிணம் 8
2. வார்த்திகம் 4
3. சித்ரம் 2
4. சித்ரதரம் 1
5. சித்ரதமம் 1/2
6. அதி சித்ரதமம் 1/4

லயம்[தொகு]

பார்க்க: லயம்

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாள_தசப்பிராணங்கள்&oldid=3358958" இலிருந்து மீள்விக்கப்பட்டது