தாள இசைக்கருவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாள இசைக்கருவி என்பது சீரான கால இடைவெளியுடனோ, மாறுபடும் கால இடைவெளியுடனோ தட்டி ஒலி எழுப்பும் இசைக்கருவிகளை குறிக்கும். இவற்றை கைகளாலோ அல்லது குச்சிகளை கொண்டோ அடிப்பதன் மூலம் ஒலி எழுப்பலாம். இவைகளை தட்டும்போது அசையும் தளத்தின் அருகிலுள்ள காற்றிலுள்ள அணுக்கள் அதிரத் தொடங்குகின்றன. இதனால் ஒலி எழும்புகிறது.