தாராபாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாராபாரதி (26 பிப்ரவரி 1947 – 13 மே 2000) தமிழகத்தை சேர்ந்த ஆசிரியரும், கவிஞரும் ஆவார். திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் இராதாகிருஷ்ணன். பெற்றோர் துரைசாமி; புஷ்பம் அம்மாள். துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தமிழ் நாடு அரசு 2010 - 2011 இல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. இவருக்கு இரு புதல்வர்கள், விவேகாநந்தன் மற்றும் முனைவர் லோகுதுரை மற்றும் ஆண்டாள் என்ற புதல்வியும் உள்ளனர். தாராபாரதி அவர்களுக்கு ஒரு அண்ணனும் (மலர் மகன் எனப்படும் துரை சீனிவாசன்), தம்பியும் (துரை மாதவன்) உள்ளனர்.[1][2][3]

படைப்புகள்[தொகு]

  1. புதிய விடியல்கள்
  2. இது எங்கள் கிழக்கு
  3. திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை)
  4. விரல்நுனி வெளிச்சங்கள்
  5. பூமியைத் திறக்கும் பொன்சாவி
  6. இன்னொரு சிகரம்
  7. கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்
  8. பண்ணைபுரம் தொடங்கி பக்கிங்காம் வரை
  9. வெற்றியின் மூலதனம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "கவி ஞாயிறு... தாராபாரதி பிறந்த தினம் இன்று...!!". Seithipunal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
  2. "வரலாற்றில் இன்று(13.05.2020)... கவிஞாயிறு தாராபாரதி மறைந்த தினம் வரலாற்றில் இன்று !" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-13. Archived from the original on 2022-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
  3. "கவிஞாயிறு தாராபாரதி நூல்கள்". web.archive.org. 2012-08-29. Archived from the original on 2012-08-29. பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராபாரதி&oldid=3890421" இலிருந்து மீள்விக்கப்பட்டது