தாம்சன் ஆறு

ஆள்கூறுகள்: 50°14′07″N 121°35′00″W / 50.23528°N 121.58333°W / 50.23528; -121.58333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாம்சன் ஆறு
Thompson River
காம்லூப்சு நகரில் வடக்கு தாம்சன் ஆற்றின் வழியாகச் செல்லும் கனடிய இரயில்வே
கனடிய ஆற்றுப்பள்ளத்தாக்கின் வரைபடம்
அமைவு
நாடுகனடா
மாகாணம்பிரிட்டிசு கொலம்பியா
சிறப்புக்கூறுகள்
மூலம்வடக்கு மற்றும் தெற்கு தாம்சன் ஆறுகளின் சங்கமம்
 ⁃ அமைவுகாம்லூப்சு
 ⁃ ஆள்கூறுகள்50°40′49″N 120°20′36″W / 50.68028°N 120.34333°W / 50.68028; -120.34333
 ⁃ ஏற்றம்345 மீட்டர்
முகத்துவாரம்பிரேசர் ஆறு
 ⁃ அமைவு
லிட்டன்
 ⁃ ஆள்கூறுகள்
50°14′07″N 121°35′00″W / 50.23528°N 121.58333°W / 50.23528; -121.58333[1]
 ⁃ உயர ஏற்றம்
195 மீட்டர்
நீளம்489 கிலோமீட்டர்[2]
வடிநில அளவு56000 சதுர கிலோமீட்டர்[3]
வெளியேற்றம் 
 ⁃ அமைவுசிபென்சசு பாலம்
 ⁃ சராசரி27300 கன அடி
 ⁃ குறைந்தபட்சம்6000 கன அடி
 ⁃ அதிகபட்சம்150000 கன அடி

தாம்சன் ஆறு (Thompson River) கனடாவின் தென்மேற்கு மாகாணத்திலுள்ள பிரிட்டிசு கொலம்பியாவில் ஓடும் பிரேசர் ஆற்றின் மிகப்பெரிய துணை நதியாகும் [4]. இது கனடாவின் பிரிட்டிசு கொலம்பியாவில் தென்-மத்திய பகுதி வழியாகப் பாய்கிறது. தெற்கு தாம்சன் ஆறு, வடக்கு தாம்சன் ஆறு என்ற இரண்டு கிளைகளைக் கொண்டதாக தாம்சன் ஆறு பாய்கிறது. பசிபிக் சால்மன் மற்றும் பசிபிக் நன்னீர் மீன் வகைகள் வாழுமிடமாக தாம்சன் ஆறு உள்ளது. தாம்சன் ஆற்றுப்பகுதியின் புவியியல் வரலாற்றில் பனிப்பாறைகள் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் பல பெரிய பனிப்பாறை ஏரிகள் கடந்த 12,000 ஆண்டுகளாக நதி பள்ளத்தாக்கை நிரப்பின என்று அறியப்படுகிறது. குறைந்தபட்சம் 8,300 ஆண்டுகளுக்கு முந்தைய நீர்நிலைகளில் மனிதர்கள் வசித்திருப்பதை தொல்பொருள் சான்றுகள் காட்டுகின்றன. பிரேசர் ஆற்றின் ஆய்வுப் பயணி சைமன் பிரேசர் அவரது நண்பரும் கொலம்பியா ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆய்வாளருமான டேவிட் தாம்சனை சிறப்பிக்க அவரது பெயரை இந்நதிக்கு சூட்டினார். படகுப் பயணமும் மீன்பிடித்தலும் இங்கு பொழுதுபோக்கு விளையாட்டுகளாக உள்ளன.

இது கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டத்தில் உள்ள பாங்சு தீவின் இடையில் பாய்கிறது, மேலும் இது ஆலாவிக் தேசிய பூங்காவிலிருந்து வடக்கு நோக்கிச் செல்கிறது.

வட அமெரிக்காவின் வடகிழக்கு வடகிழக்கு பகுதியில் பன்முக இனங்கள் வாழும் பகுதியாக வடக்கு பாங்க்ஸ் தீவின் திமோன் ஆற்றுப்பகுதி உள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளது. தாம்சன் ஆற்றின் கரையோரப்பகுதியில் தேசிய பூங்காவின் ஏறத்தாழ பாதி இங்கு அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thompson River". BC Geographical Names Information System.
  2. Thompson River பரணிடப்பட்டது 2005-05-10 at the வந்தவழி இயந்திரம், The Columbia Gazetteer of North America
  3. Thompson River, BritishColumbia.com
  4. Thompson River பரணிடப்பட்டது 2005-05-10 at the வந்தவழி இயந்திரம், The Columbia Gazetteer of North America
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்சன்_ஆறு&oldid=2901861" இலிருந்து மீள்விக்கப்பட்டது