தாங்குநிலை நகர்ப்புறவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாங்குநிலை நகர்ப்புறவியம் என்பது, நகரங்களின் வடிவமைப்பு, திட்டமிடல், நிர்வாகம் ஆகியவற்றில் தாங்குநிலைக் கொள்கைகளைப் பயன்படுத்தும் நகர்ப்புறவியம் ஆகும். உலகெங்கெலும் உள்ள பல அரச அமைப்புக்கள், அரசுசாரா அமைப்புக்கள், உயர்தொழிற் கழகங்கள், உயர்தொழில் நிறுவனங்கள் போன்றவை தாங்குநிலை நகர்ப்புறவியத்தை முன்னெடுத்துச் செல்வதுடன் இதன் நடைமுறைகள் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளன. சூழலியல் நகர்ப்புறவியம், பசுமை நகர்ப்புறவியம், நிலத்தோற்ற நகர்ப்புறவியம் போன்ற நகர்ப்புறவிய இயக்கங்கள் தாங்குநிலை நகர்ப்புறவியத்தோடு தொடர்புள்ளவை.

தாங்குநிலை நகர்ப்புறவியம், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நகர வளர்ச்சியினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை நீக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இது, எல்லா உற்பத்திப் பொருட்களும் தாங்குநிலையைக் கவனத்தில் கொண்டு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக அவற்றின் முழு வாழ்க்கை வட்டத்தையும் கவனத்திற் கொள்கிறது. மின் உற்பத்தி, உணவு உற்பத்தி போன்றவற்றையும் நகருக்குள்ளேயே கொண்டு வருவதைத் தாங்குநிலை நகர்ப்புறவியம் வலியுறுத்துகிறது. நகரங்களின் தேவைகள் அனைத்தையும் அங்கேயே பெறத்தக்க வகையில், தாங்குநிலை கொண்டவையாகவும், தன்னிறைவு கொண்டவையாகவும் இருக்கவேண்டும் என்பதை இது குறிக்கின்றது.

தாங்குநிலை நகர்ப்புறவியத்தின் கூறுகள்[தொகு]

  • நெருக்கம்
  • மனிதனுக்கு இயற்கையின் மீதும் பிற உயிர்கள் மீதும் உள்ள இயல்பான ஒட்டுறவு
  • தாங்குநிலைப் பாதைகள்
  • உயர் திறன் கட்டிடங்கள்
  • உயர்திறன் உட்கட்டமைப்பு