தர்பன் கலைக் கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்பன் கலைக் கூடம் (Darpan Art Gallery) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ளது. கலாச்சாயா பண்பாட்டு மையத்தால் 2008 ஆம் ஆண்டில் கோகலே நகரத்தில் இக்கலைக்கூடம் நிறுவப்பட்டது. இது மிகவும் தனித்துவமான கலைக்கூடமாகும். ஏனெனில் இது பெரியதாக இல்லாமல் உண்மையில் மிகவும் எளிமையான சிறிய இடமாகும். உள்ளூர் கலைஞர்களின் கலை, சிற்பம், புகைப்படம் எடுத்தல், காட்சிக் கலைகள் மற்றும் கலப்பு ஊடகக் கலைகளை காட்சிப்படுத்துவதற்காக நன்கு அறியப்படுகிறது. புனே நகரின் முதன்மையான கலைக்கூடமாகவும் இது கருதப்படுகிறது. மிலிந்து முலிக்கு, சச்சின் நாயக்கு, ரகுவீர் பரம், மணிலால் சபரிமலை, சிவானி வைசாலி இராசாபூர்கர் மற்றும் தேவுச்சி சிறீமாலி போன்ற கலைஞர்கள் இங்கு தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

தர்பன் கலைக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படைப்புகள் பல்வேறு வரம்புகளில் உள்ளன. ஓவியங்கள், புகைப்படம், சிற்பங்கள் அனைத்தும் மிகவும் எளிமையான ஆனால் தனித்துவமான சட்டங்களில் தனித்துவமாகவும், உட்புறத்தின் முக்கிய மையப் புள்ளியானது கலையை தவிர வேறொன்றுமில்லை என்பது போலவும் இருக்கும்.[1][2][3][4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Top 4 Art Galleries In India". Frinton Frames. 7 June 2023. https://frintonframes.co.uk/2023/06/07/top-4-art-galleries-in-india/. 
  2. Ingole, Vishal (19 January 2018). "The Best Art Galleries In Pune" (in en). Culture Trip. https://theculturetrip.com/asia/india/articles/the-best-art-galleries-in-pune. 
  3. "Darpan Art Gallery Pune". Whats Hot (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 February 2024.
  4. "Darpan art gallery hosted an interesting exhibition in the city recently". The Times of India. 24 January 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/events/pune/darpan-art-gallery-hosted-an-interesting-exhibition-in-the-city-recently/articleshow/73578652.cms. 
  5. "Darpan Art Gallery hosted a unique art exhibition". The Times of India. 6 June 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/events/pune/darpan-art-gallery-hosted-a-unique-art-exhibition/articleshow/69677347.cms?from=mdr. 
  6. "Avirat: The Eternal Flow, an ceramic art exhibition held at Darpan Art Gallery". The Times of India. 21 August 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/events/pune/avirat-the-eternal-flow-an-ceramic-art-exhibition-held-at-darpan-art-gallery/articleshow/65487478.cms. 
  7. "Painting exhibition of 17 artists". The Times of India. 3 September 2022. https://timesofindia.indiatimes.com/city/pune/painting-exhibition-of-17-artists/articleshow/93961261.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்பன்_கலைக்_கூடம்&oldid=3934167" இலிருந்து மீள்விக்கப்பட்டது