தருசி கருணாரத்ன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தருசி கருணாரத்ன
தனிநபர் தகவல்
தேசியம்இலங்கை
பிறப்பு18 நவம்பர் 2004 (2004-11-18) (அகவை 19)
இலங்கை
விளையாட்டு
நாடுஇலங்கை
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)800 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம்
பதக்கத் தகவல்கள்
பெண்களுக்கான தடகளம்
நாடு  இலங்கை
ஆசிய தடகள வாகை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2023 பாங்காக் 800 மீட்டர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2023 பாங்காக் 400 மீட்டர் அஞ்சலோட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2023 பாங்காக் 400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 கங்சூ 800 மீட்டர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2022 கங்சூ 400 மீட்டர் அஞ்சலோட்டம்
அக்டோபர் 2023 இற்றைப்படுத்தியது.

திசாநாயக்க முதியன்சேலாகே தருசி தில்சரா கருணாரத்ன (பிறப்பு: 18 நவம்பர் 2004) ஒரு இலங்கைத் தடகள வீராங்கனையாவார். அவர் முக்கியமாக 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கிறார். 2023 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய தடகள வாகைப் போட்டியில் 400 மீட்டர் பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இந்த நிகழ்வில் 25 ஆண்டுகள் பழமையான ஆசிய சாதனையை முறியடித்தார். [1]

அக்டோபர் 2023 இல், அவர் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 19 வயதில் பெண்களுக்கான 800 மீட்டர் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். சுசந்திகா ஜெயசிங்கவிற்குப் பிறகு இலங்கைக்காக ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றார். [2] [3]

தருசியின் முதல் பயிற்சியாளர் புஷ்பா குமுதினி அவரது திறமையைக் கவனித்த பிறகு, தனது கிராமப்புற பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் 100 மீ மற்றும் 200 மீ போட்டிகளில் போட்டியிட்டார். விளையாட்டு புலமைப்பரிசில் கிடைக்கபெற்று வளலவில் உள்ள ஏ. ரத்னாயக்கா மத்திய கல்லூரிக்கு வந்த தருசி 2018 இல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டியில் சாதனை நேரத்தில் ஓடி வெற்றி பெற்ற 4 × 400 மீ அஞ்சலோட்டக் குழுவில் உறுப்பினராக இருந்தார். அந்த ஆண்டு இளையோர் தேசியப் போட்டிய்ல் 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றது அவரது முதல் குறிப்பிடத்தக்க தனிப்பட்ட சாதனையாகும். [4] 2020ஆம் ஆண்டு அகில இலங்கைப் பாடசாலை விளையாட்டுப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 15 வயதான தருசி 400 மீ மற்றும் 800 மீ ஓட்டப் பந்தயங்களில் புதிய சாதனைகளைப் படைத்து வெற்றி பெற்றார். அவர் 400 மீ ஓட்டத்தில் 56.54 வினாடிகள் மற்றும் 800 மீ ஓட்டத்தில் 2 நிமிடம் 14.00 வினாடிகளில் ஓடி சாதனை படைத்தார். 2019ஆம் ஆண்டில், அவர் சர் ஜோன் தர்பத் போட்டிகளில் 2:17.00 என்ற புதிய 800 மீ சாதனையையும் படைத்தார். [5] ஜூன் 2023 இல், தென் கொரியாவின் யெச்சியோனில் நடந்த 20 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் தடகள வாகைப் போட்டிகளில் 800 மீட்டர் பெண்கள் பந்தயத்தில் தங்கம் வென்றார். [6] 400 மீ ஓட்டத்தில் வெள்ளியும், 4 × 400 m கலப்பு அஞ்சலோட்டத்தில் வெண்கலமும் வென்றார். [7] 2023 ஆசிய தடகள வாகைப் போட்டியில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தருசி 2:00:06 நேரத்தைப் பதிவுசெய்து தங்கம் வென்று புதிய ஆசிய சாதனையையும் படைத்தார். [8]

அவர் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையப் பிரதிநிதித்துவப்படுத்தித் தனது ஆசிய விளையாட்டுப் போட்டியில் அறிமுகமானார். பெண்களுக்கான 800 மீ. இறுதியில் அவர் 2:03.20 நிமிடங்களில் தனது ஓட்டத்தை முடித்துத் தங்கப் பதக்கம் வென்றார். 2002 இற்குப் பிறகு (21 ஆண்டுகளுக்குப் பிறகு) ஆசிய விளையாட்டு தடகளப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வென்ற முதல் நிகழ்வாக இது அமைந்தது. [9] இந்த வெற்றியின் போது பெண்களுக்கான 800 மீ ஓட்டத்தில் அவர் ஒரு புதிய தேசிய சாதனையையும் படைத்தார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 × 400 மீட்டர் போட்டியில் 3:30.88 நிமிடங்களில் முடித்து வெண்கலப் பதக்கத்தை வென்ற பெண்களுக்கான 400 மீட்டர் அஞ்சலோட்டக் குழுவிலும் அவர் இடம்பெற்றார். [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tharushi breaks 25-year-old Asian record to win gold - Breaking News | Daily Mirror" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-09-07.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Tharushi Karunarathna wins Gold at 2023 Asian Games" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
  3. "Athletics DISSANAYAKA MUDIYANSELAGE Tharushi. - The 19th Asian Games". பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
  4. "Coach Susantha predicts great future for young athletic star Tharushi". பார்க்கப்பட்ட நாள் 2023-09-07.
  5. "Tharushi Karunarathna | Crysbro Next Champ". பார்க்கப்பட்ட நாள் 2023-09-07.
  6. "Tharushi Karunarathna wins Gold in Asian Under 20 Junior Athletic Championship". பார்க்கப்பட்ட நாள் 2023-09-07.
  7. "www.sportswithharitha.com | Tharushi Dissanayake Bags 02 Golds & 01 Silver". பார்க்கப்பட்ட நாள் 2023-09-07.
  8. "Tharushi sets new records to win Gold at Asian Athletics Championship". பார்க்கப்பட்ட நாள் 2023-09-07.
  9. "Three medals for Sri Lanka today in Asian Games" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-10-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
  10. "Tarushi bags 800m Gold, adds 4x400 Relay Bronze" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-10-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தருசி_கருணாரத்ன&oldid=3805122" இலிருந்து மீள்விக்கப்பட்டது