தயோசாந்தேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயோசாந்தேட்டு (Thioxanthate) என்பது RSCS2X என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இங்கு X என்பது ஒரு கார உலோகமாக இருந்தால் கரிமக் கந்தகச் சேர்மமான தயோசாந்தேட்டு ஒரு உப்பாகும். அல்லது X என்பது ஒரு ஒரு இடைநிலைத் தனிமமாக இருந்தால் தயோசாந்தேட்டு ஒரு ஈந்தணைவியாகும். இதுவே X என்பது ஒரு கரிமத் தொகுதியாக இருந்தால் தயோசாந்தேட்டு ஒரு தயோசாந்தேட்டு எசுத்தர் ஆகும். பொதுவாக இவை மஞ்சள் நிறங்கொண்டு கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடியனவாக உள்ளன. சில வினையூக்கிகள் தயாரிப்பில் இதுவொரு முன்னோடிச் சேர்மமாகவும், நுரைமிதப்பு முகவராகவும், உயவுப்பொருட்களில் கூட்டுப் பொருளாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

தயாரிப்பும் வினைகளும்[தொகு]

தயோல் உடன் கார்பன் டைசல்பைடு முன்னிலையில் ஒரு காரத்தைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாக கார உலோக தயோசாந்தேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. சோடியம் எத்தில் தயோசாந்தேட்டு தயாரிப்பிற்குரிய சமன்பாடு இங்கே தரப்பட்டுள்ளது:[1]

EtSH + NaOH + CS2 → EtSCS
2
Na+ + H2O

சோடியம் எத்தில் தயோசாந்தேட்டு, சோடியம் எத்தில் சாந்தேட்டு சேர்மத்தின் கட்டமைப்புக்குச் சமமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இத்தகைய தயோசாந்தேட்டு எதிர்மின் அயனிகளை ஆல்க்கைலேற்றம் செய்தால் தயோசாந்தேட்டு எசுத்தர்கள் உருவாகின்றன. இங்கு எத்தில் மெத்தில் தயோசாந்தேட்டு தயாரிப்பு விளக்கப்பட்டுள்ளது.

EtSCS
2
Na+ + MeI → EtSCS2Me + NaI

தயோசாந்தேட்டு எசுத்தர்கள் டிரைதயோகார்பனேட்டுகளின் எசுத்தர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Haiduc, I. "1,1-Dithiolato Ligands" in Comprehensive Coordination Chemistry II Edited by McCleverty, J. A.; Meyer, T. J 2004, volume 1, pp. 349-376.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோசாந்தேட்டு&oldid=2749140" இலிருந்து மீள்விக்கப்பட்டது