தமிழ்நாட்டு சீர்திருத்தங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த போது சமூக, பொருளாதார, அரசியல் நோக்கில் அது மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு ஆட்சிப்பகுதியாக இருந்தது. சாதி அமைப்பின் படி அனேக தமிழர்கள் சூத்திரர்களாக கருதப்பட்டார்கள். பெண்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்த முடியாமல் கல்வி, வேலை வாய்ப்புக்கள் இன்றி அடக்கப்பட்டு இருந்தார்கள். சமூகத்தின் மீது மூடநம்பிக்கைகளும் சமயமும் இறுகிய பிடியைக் கொண்டிருந்தது. கல்வியை சிறுபான்மையினர் மட்டுமே பெற்றிருந்தனர். பெரும்பானமையானோர் கிராமத்தில் வேளாண்மையே பிரதானமாக நம்பி இருந்தார்கள். இந்தியாவின் அரசியல் மையம் வட நாட்டிலிலேயே இருந்தது. பாரதியின் பாட்டுக்களில் இத்தகைய நிலைகளில் பலவற்றை அவன் விபரித்து பாடியிருக்கிறான். இத்தகைய சூழலில்தான் தமிழில்நாட்டில் சீர்திருத்தங்கள் பல தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதக் கட்டுரை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட, தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களை விபரித்து மதிப்பிடும்.

இட ஒதுக்கீடு[தொகு]

தமிழ்நாட்டில் 80% மேற்பட்டோர் உயர்சாதி அல்லாதோர். சமூகத்தின் அதிகார சட்ட பொருளாதார சமய அலகுகளை கட்டுப்படுத்திய உயர்சாதியினர் பெரும்பான்மையினரின் முன்னேற்றத்தையும் கட்டுப்படுத்தினர். கல்வி, அரசு, வணிகச் சூழல் ஆகிய கட்டமைப்புகள் இத்தகைய நிலையையே பேணின. இதை உடைக்க அரசிலும், கல்வியிலும் இட ஒதுக்கீடு அவசியம் என உணரப்பட்டது. இந்த அடிப்படையில் 50% மேற்பட்ட இடங்கள் தமிழ்நாட்டில் ஒதிக்கீடு செய்யப்பட்டன.

நிலச்சீர்திருத்தம்[தொகு]

முதன்மைக் கட்டுரை: தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம்

தமிழ்நாட்டில் அதிகாரம் வர்க்கத்தில் ஒரு பிரிவிர் நிலக்கிழார்களே. இவர்கள் பெரும்பான்மை நிலத்தை உரிமையாக்கி, பெரும்பான்மை தொழிலாளர்களை, சில வேளைகளில் கொத்தடிமையாகவும் வைத்து தமது செல்வாக்கை நிலை நிறுத்தி வந்தனர். நிலத்தில் உழைக்கு விவசாயி பெரும் நிலம் அற்றே இருந்தார். இதை நிவர்த்தி செய்ய நிலச்சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அனைவருக்கும் இலவசக் கல்வி[தொகு]

கல்வியே சமூக பொருளாதார மேம்பாட்டை உந்தும் கருவி. சமூக ஏற்றதாழ்வை கட்டுபடுத்தக்க வல்ல கருவி. சாதித் தொழில்களை விடுத்து புதுத் தொழில்களை மேற்கொள்ளவும் கல்வி அவசியம். கல்வியின் அவசியம் தமிழ்நாட்டினாரால் நன்கு உணரப்பட்டது. எனினும் நடைமுறைப்படுத்தல் தாமதமாகவே இருந்தது. ஏழ்மை ஒரு பெரும் தடையாக இருந்தது. பசியே மாணவர்கள் பாடசாலைக்கு வாராததற்கு ஒரு முக்கிய காரணம் என காமராஜர் கண்டறிந்தார். பள்ளியில் மதிய உணவை வழங்கி மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவித்தார்.

பெண்கள் உரிமைகள்[தொகு]

தொழில்மயமாக்கம்[தொகு]

இவற்றையும் பாக்க[தொகு]