தப்பெரின் கடிகார கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2015 இல் கடிகார கோபுரம்
தப்பெரின் கடிகார கோபுரம்
புதுப்பிப்பதற்கு முன் கடிகார கோபுரம்
2012 இல் புதுப்பிக்கப்பட்ட பின்னர் கடிகார கோபுரம்

தப்பெரின் கடிகார கோபுரம் (Dufferin Clock Tower) என்பது இந்தியாவின் கர்நாடக மாகாணத்தில் உள்ள மைசூர் நகரத்தின் வரலாற்று நினைவுச்சின்னம் மற்றும் பாரம்பரிய கட்டமைப்பாகும்.

அமைவிடம்[தொகு]

மைசூரில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தேவராசா சந்தைக்கு முன்னால் தப்பெரின் கடிகார கோபுரம் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பிரிட்டிசா காலத்தில் மைசூர் இராச்சியத்தில், உடையார்கள் ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ் ஆட்சி செய்தனர். ஒரு நல்லுறவைப் பேணுவதற்கு ஆளுநரையும் மற்றும் பிற அதிகாரிகளயும் உடையார்கள் மகிழ்விக்க வேண்டியிருந்தது. தெப்பெரின் பிரபு 1884-1888 காலத்தில் இந்தியாவின் ஆளுநராக இருந்தார். 1886 ஆம் ஆண்டில் மகாராஜா பத்தாம் சாமராச உடையாரின் அழைப்பின் பேரில் மைசூருக்கு வருகை புரிந்த காலனித்துவ இந்தியாவின் முதல் ஆளுநராக தப்பெரின் ஆவார். இவரது நினைவாக கிருட்டிண ராசேந்திர வட்டத்திற்கு அருகிலுள்ள தேவராசா சந்தையின் முடிவில் சிக்ககடியாரா (சிறிய கடிகாரம்) என பிரபலமாக அறியப்படும் கடிகாரம் ஒன்று அமைக்கப்பட்டு அவரது பெயரான தப்பெரின் கடிகார கோபுரம் என்று பெயரிடப்பட்டது. இது இப்போது மைசூரில் ஒரு பாரம்பரிய கட்டமைப்பாகு. மேலும் உடையார்களின் ஆட்சிக் காலத்தில் நேரக் காவலராக பணியாற்றியது.

'சிக்ககடியாரா' (சிறிய கடிகாரம்) என்று அழைக்கப்படும் தப்பெரின் கடிகார கோபுரம் டவுன்ஹால் அருகே பெரிய கடிகாரத்திற்கு (தொட்ட கடியாரா- பெரிய கடிகாரம்) ஒப்பீட்டளவில் சிறியது. இது 1886 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில், கடிகார கோபுரம் ஒரு சுவாரஸ்யமான தோற்றத்தை அளிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டது.

கட்டமைப்பு[தொகு]

கடிகார கோபுரம் தண்டவாளங்களால் மூடப்பட்ட எட்டு தூண்களின் அஸ்திவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. மையத்தில் அலங்கரிக்கப்பட்ட நீரூற்று என்பது கட்டமைப்பின் காட்சி. உள்ளூர் மக்கள் கடிகார கோபுரத்தை சிக்காகடியாரா என்று அழைக்கிறார்கள். கடிகார கோபுரம் நினைவுச்சின்ன தேவராசா சந்தைக்கு முன்னால் அதன் இருப்பிடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. [1]

2012இல் புதுப்பித்தல்[தொகு]

கடிகார கோபுரத்தைச் சுற்றியுள்ள இடம் முன்பு வணிகர்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களால் பயன்படுத்தப்பட்டு வந்ததுது. பாரம்பரியத் துறை மறுசீரமைப்பிற்கான பணிகளை மேற்கொள்ள வணிகர்களை காலி செய்ய வைத்தது. 2012 ஆம் ஆண்டில், நகர சபை கடிகார கோபுரத்தைச் சுற்றியுள்ள இடத்தை ஓடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான இருக்கைகளுடன் புதுப்பிக்கும் பணியை நிறைவு செய்தது. இந்த இடம் சிறிய கூட்டங்களை நடத்துவதற்கு போதுமானது. நான்கு மில்லியன் இந்திய ரூபாய் திட்டத்தில் இப்பணிகள் நிறைவடைந்தன. ஒன்பது சிறிய நீரூற்றுகள் மற்றும் 13 அலங்கரிக்கப்பட்ட விளக்குகள் மேல்மாடத்தில் சேர்க்கப்பட்டன. இந்த இடம் இப்போது சிறிய இடமாக இருக்கிறது. [2]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]