தடாக சிங்காரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தடாக சிங்காரம் என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1]

மன்னன் ஒருவன் உலா வருவான். சோலையில் இருக்கும் பொய்கைக்கு வரும்போது மின்னல் போன்ற ஒருத்தி வருவாள். அவளைக் கண்ட மன்னன் அவள் மீது மோகம் கொள்வான். அவள் போனதும் சோலையில் உள்ள அனைத்தும் அவள் போலவே அவனுக்குத் தோற்றம் தரும். இவ்வாறு தோற்றம் தருவதாகப் பாடுவது தடாக சிங்காரம் என்னும் சிற்றிலக்கியம் ஆகும்.

மன் பவனி சோலை மலர் மலி வாவி வர
மின் ஒருத்தி மின் போல் வியன் எய்தக் – கன்னிக்கு
இறை மோகத்தால் சோலை ஏற்ற எல்லாம் பாடல்
அறியும் தடாகச் சிங்காரம். [2]

மேற்கோள்[தொகு]

  1. பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 486
  2. நூற்பா 13
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடாக_சிங்காரம்&oldid=2097588" இலிருந்து மீள்விக்கப்பட்டது