தசுக்கன் ஒழுங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்ட்ரியா பல்லாடியோவின் நூலில் (1570) காணப்படும், தசுக்கன் ஒழுங்கைக் காட்டும் வரைபடம்

தசுக்கன் ஒழுங்கு என்பது, செந்நெறிக் காலக் கட்டிடக்கலை ஒழுங்குகளுள் ஒன்றாகக் கருதப்படும் ஒரு ஒழுங்கு ஆகும். இந்த ஒழுங்கு பற்றிய விபரங்கள் டோரிய ஒழுங்கு, அயனிய ஒழுங்கு, கொறிந்திய ஒழுங்கு ஆகியவற்றைப் போல மிகப் பழைய கட்டிடக்கலை நூல்களில் காணப்படவில்லை. இது பற்றிய விபரங்களைக் கிபி 16 ஆம் நூற்றாண்டிலேயே அக்காலத்து இத்தாலியக் கட்டிடக்கலைக் கோட்பாட்டாளர்களால் செந்நெறிக் கட்டிடக்கலை நூல்களில் எழுதினர். இத்தாலியரான செபசுத்தியானோ செர்லியோ தமது கட்டிடக்கலை பற்றிய நூலில் (1537௫1) தசுக்கன் ஒழுங்கு உட்பட ஐந்து ஒழுங்குகளையும் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். அன்ட்ரியா பல்லாடியோவும் தசுக்கன் ஒழுங்கு குறித்த விபரங்களைத் தந்துள்ளார். இவ்விரு அறிஞர்களின் நோக்கில், தசுக்கன் ஒழுங்கு கிரேக்க டோரிய ஒழுங்கு, அயனிய ஒழுங்கு என்பவற்றைவிடக் காலத்தால் முந்தியது. அவர்கள் காலத்தில் கிடைக்கக்கூடியதாக இருந்த பல வரலாற்று எடுத்துக்காட்டுகளைக் கொண்டு தமது வாதங்களை முன்வைத்து உள்ளனர். எனினும் தசுக்கன் ஒழுங்கின் காலம் குறித்த கருத்து வேறுபாடுகள் இன்றுவரை உள்ளன.

தசுக்கன் ஒழுங்கில், தூண்கள் எளிமையான அடித்தளத்துடன், தவாளிகள் அற்றவையாக உள்ளன. தலைப் பகுதியும் அதற்கு மேலுள்ள பகுதியும் அழகூட்டல்கள் எதுவும் இன்றி இருக்கின்றன. எளிமையான தலைப் பகுதிக்குக் கீழ் தூணில் ஒரு வளையம் இருக்கும். இதன் எளிமையில் இது டோரிய ஒழுங்கை ஒத்துள்ளது. ஆனால், இதன் அளவுவிகிதங்கள் அயனிய ஒழுங்கைப் போன்று அமைந்துள்ளன. இந்த ஒழுங்கு, படைத்துறைக் கட்டிடங்கள், களஞ்சியக் கட்டிடங்கள் போன்றவற்றுக்கே பெரிதும் பொருத்தமானவை எனக் கருதப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தசுக்கன்_ஒழுங்கு&oldid=1354808" இருந்து மீள்விக்கப்பட்டது