தகவல் மற்றும் நூலக வலைய மையம்

ஆள்கூறுகள்: 23°11′18″N 72°38′00″E / 23.18833°N 72.63333°E / 23.18833; 72.63333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தகவல் மற்றும் நூலக வலைய மையம்
நாடுஇந்தியா
வகைநிறுவன தரவைப்பகம், பலகலைக்கழக ஒருங்கிணைவு
தொடக்கம்மார்ச்சு 1991; 33 ஆண்டுகளுக்கு முன்னர் (1991-03)
அமைவிடம்23°11′18″N 72°38′00″E / 23.18833°N 72.63333°E / 23.18833; 72.63333
இணையதளம்www.inflibnet.ac.in
Map
Map

தகவல் மற்றும் நூலக வலைய மையம் (Information and Library Network Centre)(சுருக்கமாக இன்ப்ளிப்நெட் மையம்-INFLIBNET Centre) என்பது இந்திய உயர்கல்விக்கான நூலகங்கள் மற்றும் தகவல் வளங்களை மேம்படுத்தி, எளிதாக்கும் ஒரு அமைப்பாகும். இதன் முதன்மை வளாகம் குசராத்தின் காந்திநகரில் உள்ளது.

1991-ல் பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையத்தின் கீழ் இந்த மையம் ஓர் திட்டமாகத் தொடங்கப்பட்டது. இது ஜூன் 1996-ல் தன்னாட்சி நிறுவனமாக மாறியது. கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அறிக்கை அளித்தது. பல்கலைக்கழக நூலகங்கள் மற்றும் பிற தகவல் மையங்களை இணைக்கும் தேசிய அளவிலான அதிவேக தரவு வலையமைப்பை இம்மையம் இயக்குகிறது.

செயல்பாடுகள்[தொகு]

இந்தியப் பல்கலைக்கழகங்களில் நூலக சேவைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை இந்த மையம் வழிநடத்துகிறது. இவற்றில் பின்வருவன அடங்கும்:

  • பல்கலைக்கழக நூலகங்களை தானியக்கமாக்குவதற்கான நிதி உதவி
  • இந்தியாவில் உள்ள நூலகங்களில் உள்ள வளங்களின் தரவுத்தளத்தை உருவாக்குதல்
  • ”சோல்” என்ற பெயரில் ஒரு நூலக மேலாண்மை பயன்பாட்டு மென்பொருளை உருவாக்குதல்[1]
  • பல்கலைக்கழக மானியக் குழு-தகவல் வலை, இணைய இணைப்புத் திட்டம்

திறந்த அணுகல் முயற்சிகளில் பின்வருவன அடங்கும்:

  • ஓஜாசு (OJAS), பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான ஆய்விதழ் தளம் [2]
  • சூத்கங்கா, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள ஆராய்ச்சி அறிஞர்களின் ஆய்வறிக்கைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிம களஞ்சியமாகும் [3]
  • சூத்கங்கோத்தரி, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி தலைப்புகளின் சுருக்கங்களின் எண்ணிம களஞ்சியமாகும் [4]
  • IR@INFLBNET, காகிதங்களின் களஞ்சியம்
  • திறந்த இணைய அணுகல் வசதியுடன் ஆராய்ச்சி மேம்பாடு வசதிக்கான பணிக்குழுக்களை உருவாக்குதல்
  • இந்தியாவில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரவுத்தளத்தைப் பராமரித்தல்
  • பிப்லியோமெட்ரிக் மற்றும் சைன்டோமெட்ரிக் ஆய்வுகள்
  • மின்னணு-மேநி-பாடசாலை (e-PG Pathshala), முதுகலை படிப்புகளுக்கான நுழைவாயில்
  • நூலக மேலாண்மை மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவற்றில் பயிற்சி வகுப்புகள்

வெளியீடுகள்[தொகு]

தகவல் மற்றும் நூலக வலைய மையம் காலாண்டு செய்தி மடல் மற்றும் ஆண்டு அறிக்கையை வெளியிடுகிறது. இவை நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  1. Shahaji Shankar Waghmode. "Role of INFLIBNET in Growth and Development of Higher Education in India" (PDF). e-LiS. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.