டோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபரிமலையில் டோலி பயணம்

டோலி (doli) என்பது பல்லக்கைப் போன்ற மனிதர்களின் துணையோடு பயணிக்கும் ஓர் இருக்கை அமைப்பு ஆகும். சாலைப் போக்குவரத்து வசதியற்ற மலைப்பாங்கான பகுதிகளில் நடக்க இயலாதவர்களும், வயதானவர்களும் பயணிக்க இதைப் பயன்படுத்துகின்றனர்.[1] இந்த டோலியானது இரு மூங்கில் கழிகளை முதன்மையாக கொண்டு குறைந்த எடையில் அமைக்கப்படுகிறது. இதில் பயணிப்பவர் அமர இதில் இருக்கைவசதி இருக்கும். என்றாலும் இதில் சிவிகை போன்று மேற்கூரையோடு வசதியாக இருக்காது. இதில் பயணிப்பவர் மேட்டில் செல்லும்போது முன்புறம் சாய்த்தும், இறக்கத்தில் இறங்கும்போது பின்பக்கம் சாய்ந்தும் சுமப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பர்.[2] இதை நான்குபேர் சுமந்து செல்வர். இந்த டோலி பயணமானது சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல பலர் பயன்படுத்துகின்றனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. ""டோலி' பயணத்தில் மலைக்கோயில் தரிசனம்". செய்தி. தினமலர். 10 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. கடைசி யாத்திரைக்கு ஒத்திகையா (19 செப்டம்பர் 2006). எனது பர்மா வழி நடைப் பயணம். சென்னை: மகாகவி பதிப்பகம். பக். 133. 
  3. "சபரிமலையில் தொடர் போராட்டம்: வாழ்வாதாரத்தை இழந்த தமிழக டோலி தொழிலாளர்கள்". செய்தி. தினமணி. 22 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோலி&oldid=3577392" இலிருந்து மீள்விக்கப்பட்டது