டையாக்சின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டையாக்ஸின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அணுக்கள் நெருக்கமாய் அமைந்த ஒப்புரு 2,3,7,8-டெட்ரா_குளோரோ_டை_பென்சோ_பி_டையாக்ஸின் 2,3,7,8- tetrachlorodibenzo-p-dioxin
டையாக்சின் அல்லது டையாக்ஃசின் (Dioxin, Polychlorinated dibenzodioxins) என்பது குளோரின் முதலான ஆலசன் சேர்ந்த கரிம வேதிப் பொருள் குழுவைக் குறிக்கும் பரவலாக அறியப்பட்டப் பொதுப் பெயர் ஆகும். பரவலாக அறியப்பட்ட டையாக்சின்களில் பலகுளோரின் சேர்ந்த டைபென்சோ_ஃவூரான் (polychlorinated dibenzofurans (PCDFs) ) மற்றும் பலகுளோரின் சேர்ந்த டைபென்சோ_டையாக்சின் (polychlorinated dibenzodioxins (PCDDs)) முக்கியமானவை. பலகுளோரின் சேர்ந்த டைபென்சோ_ஃவூரான் (PCDD/Fs) ஆனது உயிரனங்களில் சேர்வடைந்து மாந்தர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் பெருங்கேடு விளைவிக்கின்றது என அறிந்துள்ளனர். இவ் வேதிப்பொருட்கள் உயிரினங்களின் கொழுப்பில் ஈர்ப்புத்தன்மை உடையவை ஆகும்.