டெட்ரா-அமிடோ பெருவளைய ஈந்தணைவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரும்பு டெட்ரா-அமிடோ பெருவளைய ஈந்தணைவி அணைவின் கட்டமைப்பு

டெட்ரா-அமிடோ பெருவளைய ஈந்தணைவிகள் (Tetra-amido macrocyclic ligands) என்பவை உலோகங்களுடன் சேர்க்கப்பட்டு அணைவுச் சேர்மமாகும்போது பெருவளைய ஈந்தணைவிகளின் ஒரு வகையைக் கொண்டிருக்கின்றன. சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத வினையூக்கிகளாக கருதப்பட வேண்டுமென டெட்ரா-அமிடோ பெருவளைய ஈந்தணைவிகள் முன்மொழியப்படுகின்றன. எப்போதும் வர்த்தகப் பொருளாக இவை கருதப்படாவிட்டாலும் இரும்பு டெட்ரா-அமிடோ பெருவளைய ஈந்தணைவிகள் பூச்சிக்கொல்லிகளை, காகித ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை, டீசல் எரிபொருளில் இருந்து கிடைக்கும் டைபென்சோதயோபீன்கள், ஆந்த்ராக்சு தொற்று வித்துகள் போன்றவற்றை சீரழிப்பதில் வினையூக்கம் செய்கின்றன[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Collins, T. J. (2002), "TAML oxidant activators: a new approach to the activation of hydrogen peroxide for environmentally significant problems", Accounts of Chemical Research, 35 (9): 782–790, doi:10.1021/ar010079s