டி. காமராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. காமராஜ் இந்தியாவின் குறிப்பிடத்தக்க 'பாலியல் மருத்துவர்'களுள் ஒருவர் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இவர், அறிவியல்சார் பத்திரிகைகளில் பாலியல் குறித்த பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

அரசு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். 'ஆகாஷ் கருத்தரிப்புத் திறன் மையம் மற்றும் மருத்துவமனை' (Aakash Institute of Fertility & Research) எனும் பெயரில் சென்னையில் மருத்துவமனை ஒன்றை நடத்திவருகிறார். 'இந்திய பாலியல் மருத்துவ நிலையம்' (Indian Institute Of Sexual Medicine) எனும் பெயரில் அமைப்பையும் நடத்தி வருகிறார். இவரின் மனைவி ஜெயராணியும் ஒரு மருத்துவர். இருவரும் தங்களின் மருத்துவமனையில் 'மலட்டுத் தன்மை நீக்கு மருத்துவம்' செய்து வருகிறார்கள். பாலியல் குறித்த நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் காமராஜ் எழுதியுள்ளார்.

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

இவருக்கு 2012ஆம் ஆண்டிற்குரிய 'சிறந்த மருத்துவர்' பட்டத்தை தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது[மேற்கோள் தேவை].

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._காமராஜ்&oldid=3539113" இலிருந்து மீள்விக்கப்பட்டது