டி. என். ஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. என். ஜா
2012 இல் டி. என். ஜா
பிறப்புஅண். 1940[1]
இறப்பு4. பெப்ரவரி, 2021
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்திவிஜேந்தர நாராயண் ஜா
பணிவரலாற்றாளர்
அறியப்படுவதுஇந்திய வரலாற்று நூலாசிரியர்

திவிஜேந்தர நாராயண் ஜா (Dwijendra Narayan Jha, 2940 - 4. பெப்ரவரி, 2021) என்பவர் இந்திய வரலாற்றுப் பேராசிரியர். புராதன மற்றும் இடைக்கால இந்திய வரலாற்றை எழுதியுள்ளார். இவர் இந்திய வரலாறு ஆராய்ச்சிக் குழுவில் தலைவராகவும் இருந்தார்.[2]

இளங்கலைப் படிப்பை கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பிரசிடண்டு கல்லூரியில் பயின்றார். பின்னர் முதுகலைப் படிப்பை பாட்னா பல்கலைக் கழகத்தில் முடித்தார். டி. என். ஜா, வரலாற்றுப் பேராசிரியர் ஆர்.எஸ்.சர்மா என்பவரின் மாணவர் ஆவார்.

புனிதப்பசு புனைவு கதை என்னும் பெயரில் டி .என்.ஜா ஒரு நூல் எழுதினார். அந்நூலில் வேதகாலத்திலும் பின் வரும் காலங்களிலும் இந்திய மக்கள் பசு மாட்டுக் கறியைச் சாப்பிட்டு வந்தார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.[1][3][4][5]

பாரதிய சனதா கட்சியின் கொள்கைகளை இவர் விமர்சனம் செய்து பேசிவருவதால் அரசியல் அரங்கில் இவர் கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._ஜா&oldid=3103729" இலிருந்து மீள்விக்கப்பட்டது