டயமண்ட் நெக்லஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டயமண்ட் நெக்லஸ்
இயக்கம்லால் ஜோஸ்
தயாரிப்புஹூசேன்
கதைஇக்பால் குட்டிப்புரம்
இசைவித்தியாசாகர்
நடிப்பு
ஒளிப்பதிவுசமீர் தாஹிர்
படத்தொகுப்புரஞ்சன் ஆபிரகாம்
கலையகம்
  • அனிதா புரொடக்சன்ஸ்
  • LJ Films
வெளியீடு4 மே 2012 (2012-05-04)
ஓட்டம்157 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு₹3.5 crore[1][2]
மொத்த வருவாய்₹ 12.57 கோடி

டயமண்ட் நெக்லஸ் என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி காதல் நாடகத் திரைப்படமாகும். இதனை லால் ஜோஸ் இயக்கினார். கதை இக்பால் குட்டிப்புரம் எழுதியதாகவும்.

இதில் பகத் பாசில், அனுஸ்ரீ, கௌதமி நாயர், சம்வ்ருதா சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் துபாயைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அருண்குமாரின் வாழ்க்கைக் கதையாகும். அருண்குமார் தன்னுடைய அம்மாவின் கவனிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் வளர்ந்து பின் மருத்துவராகிறார். துபாயில் மருத்துவர் வேலை செய்யும் காலத்தில் ஆடம்பர வாழ்க்கையை நேசிக்கிறார். அதனால் கடனாளியாகவும் ஆகிறார். இப்படியான சூழலில் பணிபுரியும் இடத்தில் நர்சாக வேலை செய்யும் பெண்ணை நேசிக்கிறார். ஆனால் துபாயிலிருந்து இந்தியா திரும்பும் போது வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. பிறகு மீண்டும் துபாய் வந்தவர் நோயாளியாக வந்த பெண்ணுடன் தங்குகிறார். இவ்வாறு வெவ்வேறு வாழ்க்கை முறைகளைச் சேர்ந்த மூன்று பெண்களைச் சந்தித்த பிறகு அவரது ஆடம்பர வாழ்க்கையின் முடிவையும் சொல்கிறது திரைப்படம்.

நடிகர்கள்[தொகு]


ஆதாரங்கள்[தொகு]

  1. "Chennai Box-Office (June-July 2012)". சிஃபி. 1 August 2012. Archived from the original on 7 August 2012. பார்க்கப்பட்ட நாள் 13 May 2019.
  2. Manjusha Radhakrishnan (10 June 2021). "50 Bollywood, Hollywood and Arab films that were shot in the UAE". கல்ப் நியூஸ். பார்க்கப்பட்ட நாள் 15 June 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டயமண்ட்_நெக்லஸ்&oldid=3896074" இலிருந்து மீள்விக்கப்பட்டது