ஜே டபிள்யூ மார்ரியோட் மும்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜேடபிள்யூ மார்ரியோட் குழுவினால் மும்பையில் ஜே டபிள்யூ மார்ரியோட் மும்பை (JW Marriott Mumbai) அமைக்கப்பட்டது. இது இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ளது. ஜேடபிள்யூ மார்ரியோட் என்பவரால் நிறுவப்பட்டது. ரஹேஜா விருந்தோம்பல் இந்த ஹோட்டலின் இணைச்சொந்தக்காரராக "ரஹேஜா விருந்தோம்பல்" உள்ளது.

இந்தியாவில் அமைக்கப்பட்ட மார்ரியோட் குழுவின் ஹோட்டல்களில், முதல் ஹோட்டல் இதுதான். திருமணச் சேவைகளுக்காவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தி நடிகர்கள் மற்றும் நடிகைகளிடம் மிகவும் பிரபலமான இரவுநேரக் கூடுமிடமாக இந்த ஹோட்டலின் ‘எனிக்மா’ என்றழைக்கப்படும் இரவுநேர விடுதி உள்ளது. இவை தவிர மேலும் பல வசதிகளையும் இங்கு விருந்தினர்களுக்குச் செய்து கொடுக்கப்படுகிறது.[1]

இதர விவரங்கள்[தொகு]

மார்ரியோட் மும்பை ஹோட்டல் ஜனவரி 2002 இல் திறக்கப்பட்டது. மார்ரியோட் மும்பை ஹோட்டலில் மொத்தம் 356 அறைகள் உள்ளன. சூட் அறைகள் 29, உணவகங்கள் 5 மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதியும் உள்ளது.

மார்ரியோட் குழுவினால் இந்தியாவில் அமைக்கப்பட்ட பிற ஹோட்டல்கள் [2][தொகு]

  1. கோர்ட்யார்ட் மார்ரியோட் ஆக்ரா
  2. கோர்ட்யார்ட் அஹமதாபாத்
  3. த ரிட்ஸ்-கார்ல்டன், பெங்களூர்
  4. ஜேடபிள்யூ மார்ரியோட் ஹோட்டல் பெங்களூர்
  5. பெங்களூர் மார்ரியோட் ஹோட்டல் வைட்ஃபீல்டு
  6. ஃபஏர்ஃபீல்டு மார்ரியோட் பெங்களூர் ராஜாஜிநகர்
  7. கோர்ட்யார்ட் போபால்
  8. கோர்ட்யார்ட் பிலஸ்பூர்
  9. ஜேடபிள்யூ மார்ரியோட் ஹோட்டல் சண்டிகர்
  10. கோர்ட்யார்ட் சென்னை
  11. கோர்ட்யார்ட் குர்கான்
  12. ஹைதராபாத் மார்ரியோட் ஹோட்டல் மற்றும் மாநாட்டு மையம்
  13. கோர்ட்யார்ட் ஹைதராபாத்
  14. ஜெய்பூர் மார்ரியோட் ஹோட்டல்
  15. கொச்சி மார்ரியோட் ஹோட்டல்
  16. கோர்ட்யார்ட் கொச்சி விமான நிலையம்
  17. ஜேடபிள்யூ மார்ரியோட் ஹோட்டல் மும்பை
  18. ஜேடபிள்யூ மார்ரியோட் மும்பை சாஹர்
  19. மறுமலர்ச்சி மும்பை மாநாட்டு மைய ஹோட்டல்
  20. கோர்ட்யார்ட் மும்பை சர்வதேச விமான நிலையம்
  21. ஏரிப்புற குடில்கள், மும்பை
  22. ஜேடபிள்யூ மார்ரியோட் ஹோட்டல் புதுடெல்லி ஏரோசிட்டி
  23. கோவா மார்ரியோட் ரிசோர்ட் மற்றும் ஸ்பா
  24. ஜேடபிள்யூ மார்ரியோட் ஹோட்டல் புனே
  25. கோர்ட்யார்ட் புனே சகன்
  26. கோர்ட்யார்ட் புனே நகர மையம்
  27. கோர்ட்யார்ட் புனே ஹிஞ்சேவடி
  28. JW மார்ரியோட் முசூரி வால்நட் க்ரூவ் ரிசோர்ட் மற்றும் ஸ்பா

இருப்பிடம் [3][தொகு]

JW மார்ரியோட் மும்பை ஜுஹூ கடற்கரையில் அமைந்துள்ளது. விமான நிலையத்திற்கு மிகவும் அருகாமையில் அமைந்துள்ளது. ஹோட்டலில் இருந்து, வெர்சோவா கடற்கரை 5 கிலோ மீட்டர் தொலைவிலும், இளவரசர் வால்ஸ் அருங்காட்சியகம் 5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. எலிபென்டா குகைகள்[4] மற்றும் இந்தியாவின் நுழைவு வாயில் 27 கிலோ மீட்டர் தொலைவிலும், ராணியின் கழுத்துமாலை, சித்திவிநாயகர் கோவில் 15 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்றும் ஹாஜி அலி மசூதி[5] 15 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் காலத்தில் இந்த இடங்களை சுற்றிப் பார்க்கலாம்.

போக்குவரத்து[தொகு]

JW மார்ரியோட் மும்பை ஹோட்டலுக்கு அருகிலுள்ள போக்குவரத்து வசதிகள்:

  • மும்பை விமான நிலையம் – சுமார் 9 கிலோ மீட்டர் [6]
  • மும்பை ரயில் நிலையம் – சுமார் 5 கிலோ மீட்டர்

குறிப்புகள்[தொகு]

  1. "MUMBAI". Quan Spa. 2011-12-14. Archived from the original on 2015-10-18.
  2. "India Hotels". marriott.
  3. "JW Marriott Hotel Mumbai". cleartrip.
  4. "Elephanta Caves". maharashtratourism. Archived from the original on 2015-03-03.
  5. "Haji Ali Mosque". hajialidargah.
  6. "Mumbai Airport". csia. Archived from the original on 2011-11-15.