ஜேஷ்டாபிஷேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜேஷ்டாபிஷேகம் என்பது இந்து சமயக் கோயில்களில் ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாளில் நடத்தப்படுகின்ற விழாவாகும். [1] இந்து காலக் கணிதத்தின் படி உத்தராயண காலத்தின் இறுதி மாதமாக ஆனி மாதம் வருகின்றது. இது தேவர்களுக்கு மாலை காலமாகும். எனவே இக்காலத்தில் செய்யப்படுகின்ற கோயில் விழாக்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

சொல் விளக்கம்[தொகு]

ஜேஷ்டா என்றால் பெரிய என்று பொருளாகும். பகல் நேரம் நீண்டிருக்கும் மாதமான ஆனி மாதம், ஜேஷ்டா மாதம் என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் கோயில்களில் நடைபெரும் அபிசேக விழாக்கள், ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது.

கேட்டை நட்டத்திர நாள்[தொகு]

27 நட்சத்திரங்களில் கேட்டை நட்சத்திரத்தினை ஜேஷ்டா நட்சத்திரம் என்கின்றனர். இந்திரன், கேட்டை நட்சத்திரத்திற்குரிய தெய்வமாவார். இவர் தேவர்களின் தலைவனும், மூத்தோனுமாக கருதப்படுகிறார்‌.

இவர் தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் ஆனி கேட்டை நட்சத்திர நாளில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்வார். அந்நாளில் சிவாலயங்களிலும் வைணவ கோல்களிலும் நடைபெறுகின்ற‌ நிகழ்வுகளில் கலந்து கொண்டால் தலைமைப் பண்பு மேம்படும் என இந்துக்கள் நம்புகின்றனர்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. ஆடலரசனுக்கு ஆனித் திருமஞ்சனம்!
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேஷ்டாபிஷேகம்&oldid=3941864" இலிருந்து மீள்விக்கப்பட்டது