ஜெயானந்த லாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயானந்த லாமா
Jayananda Lama
இயற்பெயர்जयानन्द लामा
பிறப்பு1956
பஹ்ராபிசு, சிந்துபால் சௌக் மாவட்டம், நேபாளம்
இறப்பு (அகவை 65)
கௌசல்தர், பக்தபூர், நேபாளம்
தொழில்(கள்)Singer, actor

ஜெயானந்த லாமா (ஆங்கிலம்: Jayananda Lama; நேபாளி: जयानन्द लामा; 1956-23 பிப்ரவரி 2022) என்பவர் நேபாள நாட்டுப்புற பாடகர் மற்றும் நடிகர் ஆவார்.[1]

வாழ்க்கை[தொகு]

லாமா நேபாளத்தின் பஹ்ராபிசில் பிறந்தார், இவர் தனது 13 வயதில் தேசிய போட்டியில் பங்கேற்று ஆறுதல் பரிசு பெற்றார். இந்தியாவில் உள்ள லலித் கலா வளாகத்தில் பாரம்பரிய இசையில் இளங்கலை பட்டமும், இந்தியாவின் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவர் நேபாள அரச அகாதமியிலும், நேபாள வானொலியான, ரேடியோ நேபாளில் நாட்டுப்புறத் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.[2]

லாமா மான் கோ பந்த் (1973) திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இதன் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

லாமா 23 பிப்ரவரி 2022 அன்று, தனது 65வது வயதில், பக்தாபூர், கௌஷல்தாரில் உள்ள தனது வீட்டின் முன் இறந்த நிலையில் கிடந்தார்.[3] .

பாடல்கள்[தொகு]

  • கலகதே கைன்யோ
  • முலா கோ சானா
  • சலாலா பானி
  • சுயின் சுயின் சுயின்கனே ஜூட்டா
  • ஹெர்டாமா ராம்ரோ
  • உன்போ தா சைலுங்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Popular actor and folk singer Jayananda Lama passes away".
  2. "Folk singer Jayananda Lama".
  3. "Actor and singer Jayananda Lama passes away at 65".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயானந்த_லாமா&oldid=3672667" இலிருந்து மீள்விக்கப்பட்டது