ஜெசிகா பெல் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெசிகா பெல்
பிறப்புஜெசிகா பெல்
1981 (அகவை 42–43)
மெல்பேர்ண், ஆத்திரேலியா
தேசியம்ஆத்திரேலியர்
பணிபாடகர்-பாடலாசிரியர், நூல் வெளியீட்டாளர், எழுத்தாளர், கணினி வரைகலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்போது வரை
அறியப்படுவதுகீப் ஷெல்லி இன் ஏதென்ஸ் (இசைக்குழு)
குறிப்பிடத்தக்க படைப்புகள்கீப் ஷெல்லி இன் ஏதென்ஸ்
வலைத்தளம்
www.iamjessicabell.com

ஜெசிகா பெல் ( Jessica Bell ) (பிறப்பு 1981) ஒரு ஆத்திரேலிய பாடகியும்,பாடலாசிரியரும் எழுத்தாளரும்,[1] எழுத்து மற்றும் வெளியீட்டு பயிற்சியாளரும் மற்றும் கணினி வரைகலைஞரும் ஆவார்.[2] [3] இவர் ஒரு நினைவுக் குறிப்பு, [4] ஐந்து புதினங்கள், மூன்று கவிதைத் தொகுப்புகள் மற்றும் தனது சிறந்த விற்பனையான தொடரான ரைட்டிங் இன் எ நட்ஷெல் போன்றவற்றை வெளியிட்டுள்ளார்.[5] மேலும், ரைட்டர்ஸ் டைஜஸ்ட், [6] பப்ளிஷர்ஸ் வீக்லி, [7] தி மியூசிக், [8] லைஃப் மேட்டர்ஸ், [9] மற்றும் பொயடிகா போன்ற பல்வேறு வெளியீடுகளிலும் மற்றும் ஏபிசி ரேடியோ நேஷனல் நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளார். [10]

இவர் வைன் லீவ்ஸ் பிரஸ் என்ற பத்திரிக்கையின் வெளியீட்டாளராகவும், [11] எலிட் பூக்ஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், [12] மற்றும் நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவராகவும் உள்ளார்

அக்டோபர் 2016 இல், இவர் கீப் ஷெல்லி இன் ஏதென்ஸ் என்ற பாப் இசைக் குழுவின் முன்னணி பாடகியானார். இவர் புருனோ என்ற பெயரில் ஒரு தனி கலைஞராகவும் பதிவுசெய்து இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார். [13] மோங்கோவா என்ற இசைத்தொகுப்பின் பாடகராகவும் மற்றும் இணை பாடலாசிரியராகவும் இருக்கிறார்.[14]

சுயசரிதை[தொகு]

ஜெசிகா பெல் ஆத்திரேலியாவின் மெல்போர்னில் பிறந்தார். இவரது பெற்றோர்களான எரிகா பாக் மற்றும் திமெட்ரி விளாஸ் இருவரும் ஏப் தி க்ரை மற்றும் ஹார்ட் காண்டி என்ற இரண்டு ஆத்திரேலிய இண்டி ராக் இசைக்குழுக்களின் நிறுவனர்கள் ஆவர்.

இசைக்குழு[தொகு]

1998 இல், ஜெசிகா படித்த பள்ளியின் இசைக்குழு, மாநில அளவில் நடந்த இறுதிப் போட்டிக்குச் சென்றது. 1999 இல் இசைக்குழு மெல்போர்ன் பல்கலைக்கழக தேசிய வளாக இசைக்குழு போட்டியில் பங்கேற்று மாநிலத்தில் மூன்றாவது பரிசை வென்றது. 2003 இல், கெசிகா பெல் கிரேக்கத்திற்குச் சென்றபோது இசைக்குழு தனித்தனியே பிரிந்தது.

எழுத்துப்பணி[தொகு]

ஜெசிகா டீக்கின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலைப் பட்டத்தை முடித்தார். மேலும் 2005 ஆம் ஆண்டில் ஏதென்சில் ஆங்கில மொழி கற்பித்தல் புத்தக ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் தனது முதல் வேலையைப் பெற்றார்.

அப்போதிருந்து, பியர்சன் எஜுகேஷன், மேக்மில்லன் எஜுகேஷன், எஜுகேஷன் ஃபர்ஸ்ட் மற்றும் ஹார்பர் காலின்ஸ், மற்றும் இஎல்டி ஆகிய புத்தக வெளியீட்டு நிறுவனங்களில் சுயாதீனமாகப் பணியாற்றினார்.

2005 மற்றும் 2008 க்கு இடையில், ஒனிடா (2006) மற்றும் ஹோலி கோலைட்லி (2006, 2008 [15] ) ஆகியோரின் உதவியுடன் ஜெசிகா தனது சொந்தப் பெயரில் கிரேக்கத்தில் தனிக் கலைஞராகத் தொடர்ந்து நிகழ்த்தினார். 2008 ஆம் ஆண்டில், தனது எழுத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். மேலும் 2011 ஆம் ஆண்டில் ஸ்ட்ரிங் பிரிட்ஜ் என்ற தனது முதல் புதினத்தை லக்கி பிரஸ் என்ற பதிப்பகம் மூலம் வெளியிட்டார். புத்தகம் வெளியான ஒரு வருடத்திற்குள் பதிப்பகம் மூடப்பட்டது. பின்னர், ஜெசிகா தனது சுய-வெளியீட்டில் இறங்கினார். அதன் பின்னர் எழுத்தாளர், வெளியீட்டாளர் மற்றும் புத்தக அட்டை வடிவமைப்பாளராக பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டில், ஜெசிகா பெல் தனது சொந்த படைப்புத் திட்டங்கள் மற்றும் வணிகங்களில் கவனம் செலுத்துவதற்காக தான் கடைசியாக பணியாற்ரிய இஎல்டி என்ற பதிப்பகத்திலிருந்து வெளியேறினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Best Poetry Books 2012". 13 August 2012. http://www.goodreads.com/choiceawards/best-poetry-books-2012. 
  2. "The 10 Best Ebook Cover Design Services for Self-Publishing". 31 March 2021. https://www.makeuseof.com/best-ebook-cover-design-services-self-publishing/. 
  3. "Best Book Cover Software, Designers and Services". 19 July 2021. https://www.kindlepreneur.com/book-cover-software-designers-services/. 
  4. "Dear Reflection review: Jessica Bell's search for meaning in music and writing". 24 August 2017. https://www.smh.com.au/entertainment/books/dear-reflection-review-jessica-bells-search-for-meaning-in-music-and-writing-20170824-gy383x.html. 
  5. "Writing in a Nutshell". https://www.howtoselfpublishyourbook.net/. 
  6. "Don't Be Afraid of Indie Publishing". 6 October 2016. https://www.writersdigest.com/online-editor/dont-be-afraid-of-indie-publishing. 
  7. "Indie Author Shaped by Indie Rock Roots". 20 October 2017. https://www.publishersweekly.com/pw/by-topic/authors/pw-select/article/75160-indie-author-shaped-by-indie-rock-roots.html. 
  8. "Creativity, Cigarettes and Self-Destruction: Scenes From Jessica Bell's Memoir 'Dear Reflection'". 10 July 2017. https://www.themusic.com.au/news/creativity-cigarettes-and-self-destruction-scenes-from-jessica-bells-memoir-dear-reflection/DzUAAwIFBAc/10-07-17/. 
  9. "Growing up in the shadow of valium". 17 July 2017. https://www.abc.net.au/radionational/programs/lifematters/dear-reflection:-jessica-bell-speaks-about-her-mothers-addicti/8709372. 
  10. "Women's Work". 9 November 2013. https://www.abc.net.au/radionational/programs/poetica/women27s-work/4729558. 
  11. "Reading tastes a little different than the norm?". https://www.vineleavespress.com/. பார்த்த நாள்: 13 August 2021. 
  12. "Elite Boox". https://www.eliteboox.com/. பார்த்த நாள்: 8 December 2023. 
  13. "I Am Bruno". https://www.bruno-music.com/. பார்த்த நாள்: 13 August 2021. 
  14. "The Mongoa". https://www.themongoa.com/. பார்த்த நாள்: 13 August 2021. 
  15. "Eclectic rocker to visit". 1 April 2008. https://www.ekathimerini.com/culture/56390/eclectic-rocker-to-visit/. பார்த்த நாள்: 13 August 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசிகா_பெல்_(எழுத்தாளர்)&oldid=3902936" இலிருந்து மீள்விக்கப்பட்டது