ஜான் ஜேம்ஸ் அடுபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜான் ஜேம்ஸ் அடுபன்

ஜான் ஜேம்ஸ் அடுபன் (John James Audubon, (1785-1851)) ஒரு பிரெஞ்சு-அமெரிக்க இயற்கை ஆர்வலர், பறவையின ஆய்வாளர், ஓவியர் என பன்முகக் கலைநர். இவர் 1785 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் பிரன்சு காலனி பகுதியில் பிறந்தார்.

இவர் எழுதிய "அமெரிக்கப் பறவை" (Birds of America) என்ற புத்தகம் பறவைகளை பற்றிய அரிய தொகுப்பாக இன்றளவும் இருந்து வருகிறது. இந்த புத்தகம் டிசம்பர் 7, 2010 அன்று 11.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் விடப்பட்டது. உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட புத்தகம் இதுவாகும். இவர் 1851 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஜேம்ஸ்_அடுபன்&oldid=1360690" இருந்து மீள்விக்கப்பட்டது